OnePlus Nord Watch பற்றிய வெளியான முக்கிய விபரம்.! விலை மற்றும் ஸ்பெக்ஸ் டீடைல்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் (OnePlus Nord Watch) செப்டம்பர் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், நிறுவனம் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் விவரங்களை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord Watch இந்தியாவில் எப்போது அறிமுகம்?

OnePlus Nord Watch இந்தியாவில் எப்போது அறிமுகம்?

OnePlus Nord Watch இந்தியாவில் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு அறிமுகமாகும். அதற்கான மைக்ரோசைட் ஏற்கனவே Amazon இல் இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய வளர்ச்சியில், இந்தியாவில் வரவிருக்கும் OnePlus Nord வாட்சின் வண்ண விருப்பங்கள் மற்றும் சிறப்பம்ச தகவல்களை நிறுவனம் இப்போது வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி , நார்ட் வாட்ச் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

OnePlus Nord Watch இல் என்ன எதிர்பார்க்கலாம்?

OnePlus Nord Watch இல் என்ன எதிர்பார்க்கலாம்?

வெளியான ரெண்டர்களில், இது ஹார்ட் ரேட் சென்சார் , SpO2 மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டர் போன்ற விருப்பங்களைக் கொண்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல், ரெண்டர் தகவலின் படி, இந்த OnePlus Nord Watch ஒரு சதுர டயல் உடன் வெளிவரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் டயலின் வலது பக்கத்தில் கண்ட்ரோல் பட்டனை உடன் வருகிறது. இந்த வாட்ச் சிலிகான் ஸ்ட்ராப் உடன் வரும். மேலும், டயலைச் சுற்றியுள்ள பேனல் வாட்சின் நிறத்துடன் பொருந்தும்.

OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

OnePlus Nord வாட்ச் இந்தியாவில் என்ன விலையில் அறிமுகமாகும்?

OnePlus Nord வாட்ச் இந்தியாவில் என்ன விலையில் அறிமுகமாகும்?

அமேசானில் முகுல் ஷர்மாவால் காணப்பட்ட ஒரு பேனர், OnePlus Nord வாட்ச் இந்தியாவில் 10,000 ரூபாய்க்குள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு Nord பதிப்பு என்பதனால், இதன் விலையை நாம் இன்னும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். குறைந்தது, இந்த OnePlus Nord Watch ரூ.5,000 அல்லது அதற்கு மேல் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று நம்பப்படுகிறது. மற்றொரு லீக் தகவல் இந்த விலையைப் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Nord Watch சிறப்பம்சம்

OnePlus Nord Watch சிறப்பம்சம்

OnePlus Nord Watch 368 × 448 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் 1.78' இன்ச் AMOLED 2.5D கிளாஸ் கொண்டிருக்கும் என்பதை OnePlus உறுதிப்படுத்தியுள்ளது. OnePlus Nord Watch ஸ்க்ரோலிங் அனுபவத்தை மென்மையாக்க, நார்ட் வாட்ச் 60Hz ரெப்ரெஷ் வீதத்தைக் கொண்டிருக்கும். வரவிருக்கும் நோர்ட் வாட்ச் 100க்கும் மேற்பட்ட வாட்ச் பேஸ் வடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!

105 மோட் உடன் OnePlus Nord Watch வெளிவருமா?

105 மோட் உடன் OnePlus Nord Watch வெளிவருமா?

OnePlus Nord Watch ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெப் மற்றும் ஹார்ட் ரேட் கண்காணிப்பு அம்சங்களை வழங்கும் என்பதை உறுதிப்படுத்தும் சில கண்காணிப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக நிறுவனம் நிறம் பற்றிய தகவல் லீக் செய்யப்பட்டுள்ளது. Nord Watch ஆனது 105 மோட் உடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. OnePlus Nord Watch பெண்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் பிரத்தியேகமான அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய N-Health ஆப்ஸ் உடன் புளூடூத் V5.2 அம்சமும் இருக்குமா?

புதிய N-Health ஆப்ஸ் உடன் புளூடூத் V5.2 அம்சமும் இருக்குமா?

OnePlus Nord Watch ஆனது புதிய N-Health பயன்பாட்டின் மூலம் ஃபோனுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது . OnePlus Nord Watch புளூடூத் V5.2 அம்சத்தை ஆதரிக்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. வரவிருக்கும் நார்ட் வாட்ச் 30 நாட்கள் நீடித்து நிலைக்கு பேட்டரி பேக்அப் உடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. OnePlus Nord Watch இன் அணைத்து அம்சங்களையும் தொடர்ந்து பயன்படுத்தும் போது, இது 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கக்கூடும் என்று OnePlus தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Watch Said to Come in Black and Blue Colours in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X