Home
News

OnePlus Nord Watch விலை இவ்வளவு கம்மியா இருக்குமா? எப்போ வாங்க கிடைக்கும் தெரியுமா?

OnePlus பிராண்டை அதிகம் நேசிக்கும் தீவிரமான ரசிகரா நீங்கள்? ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என்று உங்களிடம் இருக்கும் முக்கியமான கேஜெட்களில் OnePlus லோகோ பொறிக்கப்பட்டுள்ளதா? அப்படியானால், அடுத்தபடியாக உங்கள் ஒன்பிளஸ் காலெக்ஷனில் இருக்க வேண்டிய முக்கியமான சாதனம் OnePlus Nord Watch தான். புதிய OnePlus Nord Watch டிவைஸின் அறிமுகம் தேதி, விலை மற்றும் முக்கிய விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

OnePlus Nord Watch இந்தியாவில் அறிமுகமாக ரெடியா?

OnePlus Nord Watch இந்தியாவில் அறிமுகமாக ரெடியா?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் நார்ட் பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச் டிவைஸை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் (OnePlus Nord Watch) சாதனத்தின் அறிமுக தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் கூட, அறிமுகத்திற்கு முன்னதாக, OnePlus இப்போது Nord Watch இன் விபரங்களை ஒன்பிளஸ் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதுவரை இல்லாத பீக் பிரைட்னெஸ் ஸ்மார்ட் வாட்ச் டிஸ்பிளே

இதுவரை இல்லாத பீக் பிரைட்னெஸ் ஸ்மார்ட் வாட்ச் டிஸ்பிளே

சமீபத்திய டீஸர்களில், OnePlus Nord Watch குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்த புதிய OnePlus Nord Watch சாதனத்தின் டிஸ்பிளே பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது. இது 500 nits பீக் பிரைட்னெஸ் உடன் கூடிய AMOLED டிஸ்பிளேவை வழங்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. OnePlus Nord Watch இன் டிஸ்பிளே அளவு மற்றும் தெளிவுத்திறன் பற்றிய விபரங்களையும் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் டிவைஸை எங்கிருந்து வாங்கலாம்?

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் டிவைஸை எங்கிருந்து வாங்கலாம்?

அதேபோல், ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் அறிமுகத்தை உறுதி செய்யும் விதமாக, பிரத்தியேகமான மைக்ரோ-தளம் அமேசான் இந்தியாவில் இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது. OnePlus Nord Watch அமேசான் வழியாகப் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. சரி, இப்போது வரவிருக்கும் இந்த புதிய OnePlus Nord Watch விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றிய தகவலைப் பார்க்கலாம். இது Nord வாட்ச் என்பதனால், விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Nord ஸ்மார்ட் வாட்ச் டிஸ்பிளே விபரத்தை டீஸ் செய்த நிறுவனம்

OnePlus Nord ஸ்மார்ட் வாட்ச் டிஸ்பிளே விபரத்தை டீஸ் செய்த நிறுவனம்

வரவிருக்கும் புதிய Nord ஸ்மார்ட் வாட்ச் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று OnePlus வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் டிஸ்பிளே பேனல் 368 × 448 பிக்சல் தீர்மானம் கொண்டதாக இருக்கும். அதேநேரத்தில், இது 500nits பீக் பிரைட்னெஸ் அம்சத்தைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் இணையதளத்தில் ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் இந்தியா மைக்ரோ-தளத்தை அறிமுகப்படுத்தும் மற்ற டீஸர்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

பல வாட்ச்ஃபேஸ்கள் உடன் புதிய N-Health app அறிமுகமா?

பல வாட்ச்ஃபேஸ்கள் உடன் புதிய N-Health app அறிமுகமா?

இதில், ​​வரவிருக்கும் ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் பல வாட்ச்ஃபேஸ்கள் மற்றும் உயர் புதுப்பிப்பு வீதக் காட்சியை வழங்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒன்பிளஸ் அறிமுகத்திற்கு முன்னதாக சில கண்காணிப்பு அம்சங்களை டீஸ் செய்துள்ளது. இது இதயத் துடிப்பு கண்காணிப்பு அம்சங்களுடன், புதிய N-Health app அம்சத்தையும் வழங்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. இது நார்ட் வாட்சுக்கான துணை ஆப்ஸாக செயல்படும்.

OnePlus Nord Watch விலை என்னவாக இருக்கும்?

OnePlus Nord Watch விலை என்னவாக இருக்கும்?

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் சாதனத்தின் விலை பற்றி நிறுவனம் எந்த தகவலையும் டீஸ் செய்யவில்லை. இருப்பினும், நமக்குக் கிடைத்த தகவலின் படி, இந்த புதிய OnePlus Nord Watch நாட்டில் ரூ.5,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மை என்றால், இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் வாட்ச் Amazfit, Realme, Redmi, Boat மற்றும் Noise போன்ற பிராண்ட்களின் ஸ்மார்ட் வாட்ச் உடன் நேரடியாகப் போட்டியிடும்.

OnePlus தயாரிப்புகள் மீது அட்டகாச சலுகையும் கிடைக்கிறதா?

OnePlus தயாரிப்புகள் மீது அட்டகாச சலுகையும் கிடைக்கிறதா?

OnePlus செப்டம்பர் 28 வரை OnePlus Nord வாட்ச்சின் கண்காணிப்பு அம்சங்கள், டிஸ்பிளே ரெஃப்பெஷ் ரேட் மற்றும் பிற தகவல்களை வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, OnePlus Nord வாட்ச் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் துவங்கி, செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் OnePlus சாதனங்கள் மீது தாராளமான தள்ளுபடி கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Watch Launch Date Expecting Specification and Price Details Teased Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X