புது Smartwatch வாங்க போறீங்களா? காத்திருங்க.. கம்மி விலையில் OnePlus Nord Watch வருது!

|

புதிதாக ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? பெஸ்ட்டா, ட்ரெண்டிங்கா, சிறப்பான அம்சங்களுடன் ஒரு சூப்பர் ஸ்மார்ட்வாட்ச் டிவைஸை வாங்க மிகவும் ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கானது தான். புதிதாக ஸ்மார்ட் வாட்ச் வாங்க விருப்பம் உள்ளவர்கள் எல்லாரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கம்மி விலையில் OnePlus இடமிருந்து ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வெளிவரப் போகிறது. அதுவும் மிக விரைவில், குறைந்த விலையில் வரப்போகிறது என்பது கவனிக்கத்தக்கது.

விரைவில் OnePlus Nord Watch வருது

விரைவில் OnePlus Nord Watch வருது

நீங்கள் ஒரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகர் என்றாலோ அல்லது நீங்கள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் Nord பிரியர் என்றாலோ, உங்களுக்கு இந்த செய்தி டபுள் தாமாக்க குட் நியூஸாக மாறப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், சமீபத்தில் வெளியான வதந்திகளின்படி, OnePlus நிறுவனம் புதிதாக OnePlus Nord Watch என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் டிவைஸ் ஒரு செவ்வக டயல் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்கிரீன்ஷாட் மூலம் வெளியான தகவல் என்ன சொல்கிறது?

ஸ்கிரீன்ஷாட் மூலம் வெளியான தகவல் என்ன சொல்கிறது?

இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு N Health பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்றும் சமீபத்திய தகவல்கள் குறிப்பிடுகிறது. இந்த OnePlus Nord Watch டிவைஸ் உடன் வரும் பல வாட்ச் பேஸ் மாடல்கள், ஸ்மார்ட் வாட்சின் அம்சங்கள் மற்றும் ஹெல்த் மானிட்டரிங் அம்சங்களைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களின் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இந்த வதந்தி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

BIS தரவுத்தளத்தில் காணப்பட்ட புது ஒன்பிளஸ் வாட்ச்

BIS தரவுத்தளத்தில் காணப்பட்ட புது ஒன்பிளஸ் வாட்ச்

இது Nord பிராண்டிங் கீழ் வெளிவரும் காரணத்தினால், இந்த புதிய OnePlus ஸ்மார்ட்வாட்ச் கட்டாயம் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் இந்தியத் தரநிலைகள் (BIS) தரவுத்தளத்தில் ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதால், இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என வதந்தி பரவியுள்ளது. ஆன்லைன் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் துணை பயன்பாட்டிலிருந்து சில ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டுள்ளார்.

IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

N Health ஆப்ஸுடன் செவ்வக டயல்

N Health ஆப்ஸுடன் செவ்வக டயல்

டிப்ஸ்டர் மூலம் வெளியிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி, ஒன்பிளஸ் உற்பத்தியாளரின் வதந்திக்குள்ளான இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் ஒரு குறிப்பிட்ட N Health ஆப்ஸுடன் செவ்வக டயலை உள்ளடக்கியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, டிப்ஸ்டர் தகவல் ஆறு வெவ்வேறு வாட்ச் பேஸ் மாடல்களையும் பகிர்ந்துள்ளது. பெர்ஸோனலைஸ் செய்யப்பட்ட வாட்ச் பேஸ்களுக்கான விருப்பத்துடன் கூடுதலாக, அதிகமான வாட்ச் பேஸ்களையும் நிறுவனம் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய Nord பிராண்டட் வாட்ச்சில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய Nord பிராண்டட் வாட்ச்சில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய ஒன்பிளஸ் நார்ட் வாட்சுக்கான அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் சாதனம் SpO2, இதயத் துடிப்பு மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் என்று லீக் தகவல் தெரிவிக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்சின் தொடர் உற்பத்தி சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் தொடங்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. மார்ச் 2021 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வாட்சிற்கு, இந்த புதிய Nord பிராண்டட் வாட்ச்கள் கட்டாயம் குறைந்த விலை மாற்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

OnePlus Nord வாட்ச் என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

OnePlus Nord வாட்ச் என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

OnePlus Nord வாட்ச் இந்தியாவில் ரூ.5,000 முதல் ரூ.8,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று சமீபத்திய தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய நார்ட் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ், 2022 ஆம் ஆண்டில் OnePlus Nord 3 உடன் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் மாடல், OPBBE221 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. இது முன்னர் BIS இந்தியா தரவுத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை டிப்ஸ்டர் தகவல் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.

அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் விரைவில் இந்தியாவில்

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் விரைவில் இந்தியாவில்

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை BIS தகவல் பரிந்துரைக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு துவக்கத்தில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் டிவைஸை OnePlus நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலை கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே நிறுவனத்தின் இணையதளத்தில் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு பிரிவில் என்ன வகையான வளர்ச்சியைக் காட்டவிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

புதிய OnePlus 10T எப்போது அறிமுகம் தெரியுமா?

புதிய OnePlus 10T எப்போது அறிமுகம் தெரியுமா?

தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிவைஸ் மாடலான புதிய OnePlus 10T வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. OnePlus நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட 10 சீரிஸ் வரிசையில் வெளியாகும் T வகை மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் இந்த ஒன்பிளஸ் 10T சாதனமும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி முழு விபரங்களை விரைவில் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Watch Could Launch Soon With a Rectangular Dial And Specific N Health App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X