ஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 விற்பனை: தனித்துவமான சிறப்பம்சங்கள்., ஆரம்பமே சலுகையோடு!

|

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் சமீபத்திய நாட்களாக ஸ்மார்ட்போன் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலைக்கேற்ப பல சுவாரஸ்மான அம்சங்களும் வடிவமைப்பும் உள்ளன. இது ப்ரீமியம் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 6 முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 விற்பனை: ஆரம்பமே சலுகையோடுதான்!

தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2020 ஆம் ஆண்டில் பயனர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு முன்பே முழுப்பணத்தை கட்டி முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் தனித்துவமாகவும் புதுமையான அமைப்போடும் அறிமுகம் செய்யப்பட்டது. AR வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். ஆரம்பம் முதலே ஒன்பிளஸ் நோர்ட் தனித்துவத்தை காட்டியது. அதோடு பார்வையாளர்களின் தொடர்புகளை மேம்படுத்த தனித்துவமான ஆன்லைன் பாப் நிகழ்வு ஒன்றையும் நிறுவனம் நடத்தியது.

அதோடு ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தங்களது அவதார்களை உருவாக்கவும் மற்றும் அவற்றை இன்ஸ்டாகிராம்களில் பதிவேற்றவும் இந்த நிகழ்வு அனுமதித்தது. இதில் பதிவு செய்தவர்கள் ஜூலை 27 முதல் ஜூலை 30 வரை ஒன்பிளஸ் நோர்ட் வாங்குவதற்கான பாப் அப் குறியீடுகளையும் அதன்மூலம் ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்வதற்கான அனுமதியையும் பெற்றனர்.

ஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 விற்பனை: ஆரம்பமே சலுகையோடுதான்!

ஆகஸ்ட் 6 முதல் விற்பனை

ஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் உள்ள ஒன்பிளஸ் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல் ஆன்லைன் மூலம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளமான OnePlus.in மற்றும் amazon.in இல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வாங்கலாம். அதோடு நிறுவனம் கூடுதல் சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 விற்பனை: ஆரம்பமே சலுகையோடுதான்!

ரெட் கேபிள் க்ளப் உறுப்பினர்கள் முன்பதிவு செய்திருந்தால் ஒன்பிளஸ் ஸ்டோரில் ஆகஸ்ட் 3 ஆம் தேதியே வாங்கலாம். பிற ஆஃப்லைன் முன்பதிவு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருந்தால் ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாங்கலாம். அதோடு ரெட் கேபிள் க்ளஸ் உறுப்பினர்களுக்கு 50 ஜிபி க்ளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 6 மாதம் கூடுதல் வாரண்டி ஒன்பிளஸ் வழங்குகிறது.

இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆகஸ்ட் 7 ஆம் தேதிமுதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மை ஜியோ ஸ்டோர்களில் ஒன்பிளஸ் நோர்ட் விற்பனைக்கு வருகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் மைஜியோ ஸ்டோர்கள் நாடு முழுவதும் பரவலாக உள்ளதால், இதன்மூலம் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் வாங்குவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Nord – The Most Anticipated Smartphone, Goes On Sale Starting August 6

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X