Home
News

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. மற்ற போன்களை அடித்து விரட்ட வரும் புது OnePlus Nord.. இதுல என்னலாம் இருக்கு?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) சீரிஸ் வரிசையை ஒன்பிளஸ் 12 சாதனத்தின் மூலம் புதுப்பித்து. இப்போது, நிறுவனம் அதன் என்ட்ரி லெவல் நார்ட் சீரிஸ் போன் வரிசையை புதிய சாதனங்களுடன் புதுப்பிக்கவுள்ளதாக தெரிகிறது.

பட்ஜெட் செக்மென்ட்டில் புதிய ஸ்மார்ட்போன்களை (budget segment smartphones) எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இதுவொரு குட் நியூஸ். காரணம், ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் அதன் பட்ஜெட் சாதனமான ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் (oneplus nord series) வரிசையில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. மற்ற போனை அடித்து விரட்ட வரும் புது OnePlus

ஒன்பிளஸ் நார்ட் (OnePlus Nord): சமீபத்தில் வெளியான CAD பேஸ் ரெண்டர் தகவல் புதிய நார்ட் சீரிஸ் சாதனத்தை பற்றி சில லீக்களை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் சாதனம் CPH2613 என்ற மாடல் எண்ணுடன் இணையத்தில் காணப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் சாதனமும் பாக்ஸ் வடிவ டிஸைனுடன் (oneplus nord 2024 design) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் தட்டையான தோற்றத்தில் முந்தைய ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் சாதனங்களை விட சாற்றி மெலிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் சாதனத்தின் வலது பக்கத்தில் பவர் பட்டன் (power button), வால்யூம் ராக்கர் கீஸ் (volume rocker keys) இருக்கும் என்றும், போனின் மேற்புறத்தில் IR பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர் கிரில் (speaker grills), டைப்-C போர்ட் மற்றும் சிம் கார்ட் ஸ்லாட் (SIM card) ட்ரே போன்றவை இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் AMOLED டிஸ்பிளேவுடன் பன்ச் ஹோல் செல்பி கேமரா கட்அவுட்டை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் கூறியுள்ளது.

பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. மற்ற போனை அடித்து விரட்ட வரும் புது OnePlus

இந்த ஒன்பிளஸ் நார்ட் ஸ்மார்ட்போன் சாதனம் க்ளோஸி தோற்றத்துடன் பிளாஸ்டிக் பேக் பேனல் பாடியை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் வெர்ட்டிக்கல் கேமரா பம்ப் அமைப்பை LED பிளாஷ் உடன் கொண்டிருக்கும் என்று லீக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 50MP பிரைமரி லென்ஸ் உடன் OIS ஆதரவை கொண்டிருக்கும்.

இது தவிர பின்பக்க கேமராவில் என்ன சென்சார்களை ஒன்பிளஸ் நிறுவனம் இந்த முறை வழங்கவுள்ளது என்று தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இதில் ஒரு அல்ட்ரா வைடு லென்ஸ் அல்லது மேக்ரோ கேமரா லென்ஸ் இடப்பெற வாய்ப்புள்ளது என்று லீக் தகவல் கணித்துள்ளது. அதேபோல், இந்த வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் நார்ட் போனின் முன்பக்கத்தில் சாதனம் 16MP செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் 2024 விலை என்ன (OnePlus Nord 2024 Price): இது 5000mAh பேட்டரி அம்சத்துடன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பாஸ்ட் சார்ஜிங்கின் வேகம் பற்றிய விபரங்கள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், இதன் விலை பற்றி பேசுகையில், ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய நார்ட் சீரிஸ் சாதனத்தை ரூ.15,000 முதல் 25,000 விலை புள்ளிக்குள் அறிமுகம் செய்யுமென்று வதந்திகள் வெளியாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord phone with AMOLED display and 50MP dual rear camera 16MP selfie camera spotted on online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X