பட்ஜெட் கிங்..சத்தமில்லாமல் வெளியான OnePlus Nord N30 SE 5G.. 3W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்.. விலை என்ன?
ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் ஒன்பிளஸ் நார்ட் N30 SE 5ஜி (OnePlus Nord N30 SE 5G) என்ற பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை என்ன? இது எங்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதை பார்க்கலாமா?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் இன்று முதல் விற்பனைக்கு (OnePlus 12 Sale Starts Today) கிடைக்கிறது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் ஒரு புதிய மலிவு விலை பட்ஜெட் செக்மென்ட் (Budget Segment OnePlus Smartphone) ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை UAE சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்ட் N30 5ஜி (OnePlus Nord N30 5G) ஸ்மார்ட்போனிற்கு பிறகு இந்த போனை நிறுவனம் வெளியிட்டுள்ளது.OnePlus நிறுவனம் இப்போது அதன் புதிய OnePlus Nord N30 SE 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை UAE-யில், அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் N30 5ஜி (OnePlus Nord N30 5G) :
இது 6.72" இன்ச் கொண்ட FHD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது பஞ்ச்-ஹோல் கட்அவுட் அமைப்புடன் கூடிய 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன், பின்புறத்தில் 2 கேமராக்களை கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. இது ஆக்டா கோர் டைமன்சிட்டி 6020 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் இல் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்களை இப்போது முழுமையாக பார்க்கலாம்.
இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் N30 SE 5ஜி (OnePlus Nord N30 SE 5G) ஸ்மார்ட்போன் ஆனது 6.72" இன்ச் அளவு கொண்ட 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு HD+ LCD டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6020 சிப்செட் உடன் வருகிறது. இந்த சிப்செட் உண்மையில் ஒரு அற்புதமான சிப்செட் மாடலாகும்.

காரணம், இது பட்ஜெட் செக்மென்ட் கேமிங் போன்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது. இது டூயல் 2.2GHz கார்டெக்ஸ் A76 + ஹெக்ஸா 2GHz கார்டெக்ஸ் A55 சிபியு (CPU) மற்றும் மாலி-G57 MC2 ஜிபியு உடன் இயங்குகிறது. இந்த புதிய OnePlus Nord N30 SE 5G சாதனம் 4ஜிபி LPDDR4X ரேம் உடன் 128ஜிபி (UFS 2.2) ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இது மைக்ரோ எஸ்டி மூலம் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கும் அம்சத்துடன் வருகிறது. இது டூயல் சிம் கார்டு ஆதரவுடன் வருகிறது. இது ஆக்சிஜன்ஓஎஸ் 13.1 உடன் ஆண்ட்ராய்டு 13 (Android 13 Oxygen 13.1) இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் கேமரா பற்றி பேசுகையில், இது 50MP + 2MP கொண்ட டூயல் கேமராவுடன் முன்பக்கத்தில் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் N30 5ஜி விலை (OnePlus Nord N30 5G Price):
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 6 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.3, GPS, GLONASS, Beidou, USB Type-C, NFC போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது. இது 33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.13,500 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








