Home
News

அதிரடி தள்ளுபடி- ஒன்பிளஸ் நோர்ட் 2, பேக் மேன் பதிப்பு, நோர்ட் சிஇ வாங்க சரியான நேரம்: உடனே முந்துங்கள்!

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் தொடரில் நோர்ட் 2, நோர்ட் 2 பேக் மேன் பதிப்பு மற்றும் நோர்ட் சிஇ 5ஜி போன்ற மலிவான சாதனங்களை வழங்கி வருகிறது. அமேசான் நிறுவன தள்ளுபடியின் மூலம் இந்த மூன்று மாடல் சாதனத்தையும் ரூ. 3000 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த சலுகையானது டிசம்பர் 31 வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சலுகையை எப்படி பெறுவது என்ற விவரங்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2, நோர்ட் 2 பேக் மேன் பதிப்பு சலுகைகள்

ஒன்பிளஸ் நோர்ட் 2, நோர்ட் 2 பேக் மேன் பதிப்பு சலுகைகள்

இந்த சாதனத்தை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது தள்ளுபடிகள் கிடைக்கிறது. நோர்ட் 2 சாதனம் வாங்கும் போது ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் நோர்ட் 2 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடலை ரூ.25,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த அடிப்படை மாடல் ஆனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதே வங்கி சலுகை இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட்-க்கும் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனமானது மூன்று வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இது க்ரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வூட் வண்ணத்தில் கிடைக்கிறது.

நோர்ட் 2 பேக் மேன் பதிப்பு

நோர்ட் 2 பேக் மேன் பதிப்பு

மறுபுறம் நோர்ட் 2 பேக் மேன் பதிப்பானது ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் வாங்கும் போது ரூ.3000 தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதன்மூலம் பேக் மேன் பதிப்பின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது ரூ.37,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.34999 என கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி சலுகைகள்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி சலுகைகள்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ சாதனத்தை ஐசிஐசிஐ வங்கி கார்ட் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1500 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சாதனமானது 6 ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பத்தில் வருகிறது. அது சார்கோல் இன்க், சில்வர் ரே மற்றும் ப்ளூ வாய்ட் ஆகும்.

இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனல்

இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனல்

சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனலுடன் கூடிய புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் PAC-MAN கேமால் ஈர்க்கப்பட்ட ஒரு கஸ்டம் தீம், UI அனிமேஷன்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் ப்ரீ-டூ-பிளே Pac-MAN 256 கேமும் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின்புறம் PAC-MAN லோகோ மற்றும் கேமில் பேக்-மேன் என்கிற கதாபாத்திரம் உட்கொள்ளும் சிறிய புள்ளிகளையும் காண முடிகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் பேக் பேனல் இருட்டில் ஒளிரவும் செய்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் பிளஸ் ஆதரவு, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் மாடலின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர நைட்ஸ்கேப் அல்ட்ரா மோட்,போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ, 4கே வீடியோ பதிவு ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் நோர்ட் 2 அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2 அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பொருத்தவரை இது 6.43' இன்ச் எப்.எச்.டி. பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 8 ஜிபி மற்றும் 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் மாடலாக வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும் ஆக்சிஜன் ஓஎஸ் உடன் செயல்படுகிறது. 50 எம்பி பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 32 எம்பி செல்பி கேமரா போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது 4500 எம்.ஏ.எச். பேட்டரி உடன் வார்ப் சார்ஜ் 65 ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus Nord CE, Pac Man Edition, Nord 2 Gets Massive Discount: How to Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X