பட்ஜெட்ல மாஸ்.. தரமான அம்சங்களை பேக் செய்துள்ள OnePlus Nord CE 4.. விலை என்ன தெரியுமா?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒன்பிளஸ் நார்ட் CE 4 என்ற பெயருடன் வரும் ஏப்ரல் 1ம் தேதி அறிமுகமாகவிருக்கிறது. இதன் விலை பற்றிய விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
OnePlus Nord CE 4 5G: ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பட்ஜெட் செகேமன்ட் ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையான நார்ட் (Nord) வரிசையில், புதிதாக ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு இந்திய நேரத்தின் படி, ஏப்ரல் 1ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி: ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாக, இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்ச தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இத்துடன் யாரும் எதிர்பாத்திடாத வகையில், ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி போனுடன் கிடைக்கும் ப்ரொடெக்ஷன் பாதுகாப்பு திட்டத்தின் விலை தகவல்களும் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் ப்ரொடெக்ஷன் பேக்கேஜ் (OnePlus Protection Package): திட்டம் இப்போது ரூ.269 விலை முதல் கிடைக்கிறது. இத்துடன் 12 மாத ஸ்கிரீன் ப்ரொடெக்ஷன் திட்டம் ரூ.1699 விலையில் வருகிறது என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இத்துடன் இன்னும் கூடுதல் சலுகையாக 1200 ரூபாய் மதிப்பிலான ஒன்பிளஸ் ஆடியோ வாங்க பயன்படுத்தப்படும் கூப்பன் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விலை என்ன? இறுதியாக, இது 3 மாத இலவச வாரன்டி நன்மையை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வாரன்டி போன் வாங்கிய 3 மாதங்களில் முழு நிவர்த்தனையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27,000 முதல் ரூ. 30,000 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி சாதனத்தின் சிறப்பம்ச விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி சிறப்பம்சம்:
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.72" இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED) வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 அறிமுகம் செய்யப்படும். இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் அம்சங்களை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) உடன் வெளிவரும்.
ஸ்டோரேஜ்: இந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இது வெளிவரும் என்றும், இதில் இந்த முறை மெமரி கார்டு வசதியும் இருக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50MP + 8MP கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும்.
பேட்டரி: முன்பக்கத்தில் இந்த ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி 16MP செல்பி கேமராவை கொண்டிருக்கும். இது 5000mAh பேட்டரி உடன் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நார்ட் CE 4 5ஜி சாதனம் மின்ட் (mint) மற்றும் கிரே (grey) நிறங்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








