Home
News

வந்துட்டாப்ல..வந்துட்டாப்ல.. OnePlus Nord CE 4 5G பற்றி வெளியான சீக்ரெட்.. ஆரம்பமே அதகளம் டோய்..

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தவொரு ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன் சாதனம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் பிரிவில் மக்களை கவர்ந்த ஒன்பிளஸ் நார்ட் CE 3 5G போனின் அடுத்த மாடல் ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G அறிமுகமாகிறது.

கடந்த ஆண்டு ஒப்போ (Oppo) நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K11 போனை அறிமுகம் செய்தது. இதே போனை ஒன்பிளஸ் பிராண்ட் பெயர் மாற்றம் செய்து ஒன்பிளஸ் நார்ட் CE 3 5G (OnePlus Nord CE 3 5G) என்று அறிமுகம் செய்தது. தெரியாதவர்களுக்கு, ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரண்டு பிராண்டுகளுக்கு ஒரே தலைமையின் கீழ் இயங்குகிறது.

வந்துட்டாப்ல..வந்துட்டாப்ல.. OnePlus Nord CE 4 5G பற்றிய சீக்ரெட்..

OnePlus Nord CE 4 5G: இப்போது சமீபத்திய லீக் தகவல் படி, ஒரு டிப்ஸ்டர் ஒப்போ K12 ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார். ஒப்போ K12 பற்றிய தகவல்கள் நமக்கு தெரிந்தால், அது உலக சந்தையில் மிக விரைவில் OnePlus Nord CE 4 5G ஆக வெளிவர போகிறதென்றே அர்த்தமாகும். இதை வைத்து பார்க்கையில், சீன சந்தையில் ஒப்போ K12 அறிமுகமாகவிருக்கிறது.

உலக சந்தையில், இதே சாதனம் OnePlus Nord CE 4 5G என்ற பெயருடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. சரி, காலம் தாமதிக்காமல், இந்த ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். டிப்ஸ்டர் வெளியிட்ட முதல் முத்தான தகவலே ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G (OnePlus Nord CE 4 5G) இன் விலை பற்றியது தான்.

அடுத்து வெளிவரவிருக்கும் ஒன்பிளஸ் நார்ட் சாதனம் ரூ.23,238 விலை புள்ளியில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விலை ஒப்போ K12 (Oppo K12) ஸ்மார்ட்போனிற்கும் பொருந்தும். முந்தைய ஒப்போ K11 (Oppo K11) ஸ்மார்ட்போன் சாதனம் 3 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

வந்துட்டாப்ல..வந்துட்டாப்ல.. OnePlus Nord CE 4 5G பற்றிய சீக்ரெட்..

இதில் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் போன்ற வேரியண்ட் மாடல்கள் இடம்பெற்றது. அதேபோல், ஒப்போ K12 சாதனமும் 3 ஸ்டோரேஜ் விருப்பங்களை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரவிருக்கும் ஒப்போ K12 அல்லது ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G (OnePlus Nord CE 4 5G) சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

ஒப்போ K12 (Oppo K12): இந்த வரவிருக்கும் ஒப்போ K12 அல்லது ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G (OnePlus Nord CE 4 5G) சாதனம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட்டை கொண்டிருக்கும். இது 100W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு லீக் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரவிருக்கும் இந்த வரவிருக்கும் ஒன்பிளஸ் நார்ட் CE 4 5G (OnePlus Nord CE 4 5G) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்ப்பட்ட கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இது எவ்வளவு உண்மையாக போகிறது என்பதை நாம் இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தலாம். 2024 இல் பெஸ்ட் பட்ஜெட் போனாக இந்த OnePlus Nord CE 4 5G மாறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 4 5G allice OPPO K12 Launching Soon Key Specifications Tipped
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X