மலிவு விலையில் 108MP கேமரா கொண்ட OnePlus Nord CE 3 Lite 5G! இறங்கி அடிக்கிறதா OnePlus?
OnePlus நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட் போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனத்தை நிறுவனம் ரூ.20,000 விலைக்குள் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.
OnePlus Nord CE 3 Lite 5G சாதனத்தின் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த டிவைஸில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும் என்பதை சமீபத்திய தகவல் ஒன்று காண்பித்துள்ளது. ரூ.20,000 விலைக்குள் இந்த ஆண்டின் பெஸ்ட் 5ஜி மொபைல் போனாக (Best 5G Mobile Phone) இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்றும், ஒன்பிளஸ் வரிசையில் இது தான் இந்த ஆண்டின் மிகவும் மலிவான விலை சாதனமாக இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனக்கென்ற ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டது. மலிவு விலை போன் முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரை அணைத்துப் பிரிவுகளிலும் மக்களை இந்த நிறுவனம் ஈர்த்துவிட்டது. அடுத்த மாதம், ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புத்தம் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனை ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
OnePlus Nord CE 3 Lite 5G என அழைக்கப்படும் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையைப் புரட்டிப்போடப் போகிறது. இது லைம் க்ரீன் (Lime Green) நிறத்தில் வருவதாக நிறுவனத்தின் சமீபத்திய போஸ்டர் விபரங்கள் காண்பித்தது. இப்போது, மற்றொரு லீக் தகவல் மூலம், இந்த போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி தெளிவாகப் பார்க்கலாம்.
சமீபத்திய அறிக்கையின் படி, OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 6.7' இன்ச் கொண்ட FHD+ 120Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், இது பயனர்களுக்கு மென்மையான மற்றும் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்கும். இந்த சாதனம் 67W சார்ஜிங் கொண்ட பெரிய 5,000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய அறிக்கையின் படி, OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 6.7' இன்ச் கொண்ட FHD+ 120Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், இது பயனர்களுக்கு மென்மையான மற்றும் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்கும். இந்த சாதனம் 67W சார்ஜிங் கொண்ட பெரிய 5,000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனம் 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை, இது பல பயனர்களுக்கு ஒரு முக்கியமான புள்ளியாக இருக்கலாம். இந்த ஃபோனில் இரண்டு 2MP ஸ்னாப்பர்களுடன் 108MP பிரைமரி கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், பட்ஜெட் விலையில் நிறுவனம் 108MP கேமராவை வழங்கவுள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி கேமரா இருக்கும்.
OnePlus Nord CE 3 Lite 5G ஆனது Wi-Fi ac, Bluetooth 5.1, டூயல் சிம் மற்றும் NFC உடன் வருகிறது. கூடுதலாக, சாதனம் Android 13 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்திய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் பயனர்களுக்கு உறுதியளிக்கிறது. OnePlus Nord CE 3 Lite 5G விலை பற்றிப் பேசுகையில், இது ஒரு நுழைவு-நிலை தயாரிப்பு என்பதால், மலிவு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு ரூ.20,000க்கு கீழ் இருக்கும், இது அதன் முன்னோடியின் விலையைப் பூர்த்தி செய்கிறது. இருப்பினும், நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை நாம் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி மிக அருகில் இருப்பதனால், இந்த சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பட்ஜெட் பிரியர்களை இந்த சாதனம் நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications








