OnePlus Nord CE 3 Lite 5G விலையில் மாற்றமா? முன்பை விட அதிக விலையா? என்ன சொல்றீங்க?
OnePlus Nord CE 3 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் ஏப்ரல் 4ம் தேதி அறிமுகமாகவுள்ளது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக இதன் விலை மற்றும் சிறப்பம்சம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியானது. ஆனால், இப்போது இதன் விலையில் மாற்றமிருப்பதாக தெரிகிறது.
OnePlus Nord CE 3 Lite 5G சாதனத்தின் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த டிவைஸில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும் என்பதை கடந்த சில வாரங்களாக நாம் தொடர்ந்து இணையத்தில் பரவலாக பார்த்து வருகிறோம். OnePlus Nord CE 3 Lite 5G சாதனம் இந்தியாவில் ரூ.20,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று முன்பு கூறப்பட்டது.

இதன் மூலம், இந்த ஆண்டின் குறைந்த விலை பெஸ்ட் 5ஜி மொபைல் போனாக (Best 5G Mobile Phone) இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் வரிசையில் இது தான் இந்த ஆண்டின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் என்று நிறுவனம் விளம்பரம் செய்துகொண்டது. அந்த வரிசையில், இன்று வெளியான ஒரு புதிய தகவல் இந்த போனின் விலை பற்றிய சில மாற்றங்களை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.20,000 என்ற விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய தகவலின் படி, இந்த சாதனம் இந்திய சந்தையில் ரூ. 21,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதை பரிந்துரைக்கிறது. இந்த விலை நாம் முன்பே எதிர்பார்த்து காத்திருந்த விலையை விட இப்போது ரூ.1000 அதிகமாகிறது.
இது லைம் க்ரீன் (Lime Green) நிறத்தில் வருவதாக நிறுவனத்தின் சமீபத்திய போஸ்டர் விபரங்கள் காண்பித்தது. இப்போது, மற்றொரு லீக் தகவல் மூலம், இந்த போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி தெளிவாகப் பார்க்கலாம். சமீபத்திய அறிக்கையின் படி, OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 6.7' இன்ச் கொண்ட FHD+ 120Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

இது பயனர்களுக்கு மென்மையான மற்றும் அதிவேகமான பார்வை அனுபவத்தை வழங்கும். இந்த சாதனம் 67W சார்ஜிங் கொண்ட பெரிய 5,000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, இது பல பயனர்களுக்கு ஒரு முக்கியமான புள்ளியாக இருக்கலாம். இந்த ஃபோனில் இரண்டு 2MP ஸ்னாப்பர்களுடன் 108MP பிரைமரி கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், பட்ஜெட் விலையில் நிறுவனம் 108MP கேமராவை வழங்கவுள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி கேமரா இருக்கும்.
OnePlus Nord CE 3 Lite 5G ஆனது Wi-Fi ac, Bluetooth 5.1, டூயல் சிம் மற்றும் NFC உடன் வருகிறது. கூடுதலாக, சாதனம் Android 13 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்திய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் பயனர்களுக்கு உறுதியளிக்கிறது. OnePlus Nord CE 3 Lite 5G விலை பற்றிப் பேசுகையில், இது ஒரு நுழைவு-நிலை தயாரிப்பு என்பதால், இந்த போனின் விலை இப்போது ரூ.21,999 ஆக எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








