108MP கேமராவுடன் கெத்தாக இன்று அறிமுகமாகும் OnePlus Nord CE 3 Lite 5G! அறிமுக சலுகை உண்டா?
OnePlus நிறுவனம் ஏப்ரல் 4ம் தேதி (இன்று) அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus Nord CE 3 Lite 5G ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை நிறுவனம் ரூ.21,000 விலைக்குள் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.
OnePlus Nord CE 3 Lite 5G சாதனத்தின் அறிமுகத்திற்கு முன்பாக, இந்த டிவைஸில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெறும் என்பதை இன்று முழுமையாக நாம் தெரிந்துவிடலாம். இந்த புதிய சாதனம் ரூ.21,000 விலைக்குள் இந்த ஆண்டின் பெஸ்ட் 5ஜி மொபைல் போனாக (Best 5G Mobile Phone) வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வரிசையில் இது மிகவும் மலிவான விலை சாதனமாக இருக்குமென்று அறிவித்துள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G சாதனத்துடன், நிறுவனம் OnePlus Nord Buds 2 TWS சாதனத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. ஏப்ரல் 4, 2023 மாலை 7 மணிக்கு (IST) ஆன்லைன் "லார்ஜர் தான் லைஃப்" என்ற வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்படும். இந்நிகழ்வு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக லைவ் செய்யப்படும். நீங்கள் நேரடியாக லைவ் நிகழ்வை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.
OnePlus Nord CE 3 Lite 5G என அழைக்கப்படும் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையைப் புரட்டிப்போடப் போகிறது. இது லைம் க்ரீன் (Lime Green) நிறத்தில் வருவதாக நிறுவனத்தின் சமீபத்திய போஸ்டர் விபரங்கள் காண்பித்துள்ளது. OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 6.7' இன்ச் கொண்ட FHD+ 120Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், இது பயனர்களுக்குத் தரமான வீடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த சாதனம் 67W சார்ஜிங் கொண்ட பெரிய 5,000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை, இது மக்களை கட்டாயம் கவர்நதுலுக்கப் போகிறது.

காரணம், இந்த ஃபோனில் இரண்டு 2MP ஸ்னாப்பர்களுடன் 108MP பிரைமரி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது. ஆம், பட்ஜெட் விலையில் நிறுவனம் 108MP கேமராவை வழங்கவுள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி கேமரா இருக்கும். OnePlus Nord CE 3 Lite 5G ஆனது Wi-Fi ac, Bluetooth 5.1, டூயல் சிம் மற்றும் NFC உடன் வருகிறது. கூடுதலாக, சாதனம் Android 13 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Nord CE 3 Lite 5G விலை பற்றிப் பேசுகையில், இது ஒரு நுழைவு-நிலை தயாரிப்பு என்பதால், மலிவு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் எதிர்பார்க்கப்படும் விலை முதலில் ரூ.20,000க்கு கீழ் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான தகவல் இந்த சாதனம் ரூ.21,999 என்று விலை முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ. 21,999 விலையில் கிடைக்கலாம்.
மறுபுறம், இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் விலை ரூ.23,999 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரியர்களை இந்த சாதனம் நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அறிமுக சலுகையுடன் இந்த OnePlus Nord CE 3 Lite 5G இன்னும் குறைந்த விலையில் கிடைக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications