கம்மி விலையில் OnePlus Nord CE 3 Lite 5G புது அவதாரமா? ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
என்ன தான் இந்தியாவில் தொடர்ந்து பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், சில ஸ்மார்ட்போனின் வருகைக்காக மக்கள் நீண்ட காலம் காத்திருப்பார்கள். அப்படி சமீபத்தில் மக்களின் கவனத்தில் வைரமாய் ஜொலிக்கும் சாதனம் தான் OnePlus Nord CE 3 Lite 5G மொபைல்.
சமீப காலமாக இணையத்தில் அடிக்கடி இந்த பெயர் மீண்டும்-மீண்டும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் இந்த போனின் சிறப்பம்சம் பற்றிய விபரங்கள் லீக் ஆகிக்கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், இந்த சாதனத்தின் வருகை எப்போது என்பது போன்ற தகவலும் இணையத்தில் லீக் ஆகி வருகிறது. இப்போது இந்த OnePlus Nord CE 3 Lite 5G மொபைல் எப்போது? என்ன அம்சத்துடன் வெளிவரும் என்பது லீக் ஆகியுள்ளது.

OnePlus நிறுவனம் பட்ஜெட் பிரியர்களைக் குறிவைத்து, அறிமுகம் செய்தது தான் Nord சீரிஸ் சாதனங்கள். அந்த வரிசையில் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் அடுத்த புதிய மிட் ரேஞ் சாதனம் தான் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்தியாவில் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நீண்ட காலமாக ஹைப்பை உருவாக்கி வருகிறது. இந்த சாதனம் எப்போது இந்தியா வரும் என்று தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதி OnePlus Nord CE 3 Lite 5G சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிக்கை தகவல் குறிப்பிடுகிறது. OnePlus நிறுவனம் இதுபற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், இது பல்வேறு சான்றிதழ் வலைத்தளங்களில் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. வதந்தியான அறிமுகத்திற்கு முன்னதாக, OnePlus Nord CE 3 Lite 5G ஆனது இப்போது Geekbench தரவுத்தள வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது.
அதேபோல், சிங்கப்பூர் IMDA சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இதில் OnePlus Nord CE 3 Lite 5G போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. Geekbench தரவுத்தளப் பட்டியலில் OnePlus Nord CE 3 Lite 5G போன் மாடல் எண் OnePlus CPH2465 உடன் காணப்பட்டுள்ளது. இதன் சிங்கிள்-கோர் தேர்வில் 688 மதிப்பெண்களையும், மல்டி-கோர் தேர்வில் 1,796 மதிப்பெண்களையும் பெற்றுள்ளதாக வலைத்தள தகவல் குறிப்பிடுகிறது.

OnePlus Nord CE 3 Lite 5G ஆனது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும் என்பதையும் பட்டியல் வெளிப்படுத்துகிறது. இந்த சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. IMDA பட்டியலுக்குச் செல்லும்போது, OnePlus Nord CE 3 Lite 5G மோனிகரை உறுதிப்படுத்துகிறது. இந்த சாதனம் விரைவில் ஆசிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதைக் குறிக்கிறது.
OnePlus Nord CE 3 Lite 5G ஆனது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் கூடிய 6.7' இன்ச் IPS LCD பேனலைக் கொண்டிருக்கும். இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 695 செயலி மூலம் இயக்கப்படும், இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரலாம். இது OxygenOS 13 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது.
கேமரா பற்றி பேசுகையில், இது 108MP + 2MP + 2MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும். OnePlus Nord CE 3 Lite 5G மொபைலின் முன்பக்கத்தில், 16MP முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும். இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வரக்கூடும் . இதன் விலை பற்றிய பார்க்கையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த OnePlus Nord CE 3 Lite 5G சாதனம் ரூ.18,999 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








