அடி தூள் அம்சத்துடன் வருகிறது OnePlus Nord CE 3 5G! மொத்த பட்ஜெட் பிரியர்களுக்கு வெயிட்டிங்! ஏன்னா?
சில விஷயங்களை கேட்கும் போதே, நமக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தம் மற்றும் குஷி பெருக்கெடுத்து ஓடும். அந்த வகையில், இப்போது இந்தியர்களை குஷியடைய செய்த செய்தி தான், OnePlus Nord CE 3 ஸ்மார்ட்போனின் வருகை விபரம்.
OnePlus Nord CE 3 ஜூலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாக, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய வதந்திகள் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் எப்போது இந்த போன் அறிமுகம் செய்யப்படுகிறதோ, அப்போது முதல், இந்த 2023 ஆம் ஆண்டின் மிகவும் மலிவு விலை OnePlus ஸ்மார்ட்போனாக இந்த சாதனம் திகழப் போகிறது என்று ஒன்பிளஸ் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை இந்த சாதனம் உருவாக்கியுள்ளது.

OnePlus Nord CE 2 5G விரைவில் அறிமுகமா?
இதன் முன்னோடி ஸ்மார்ட்போன் மாடலான OnePlus Nord CE 2 5G சாதனம் பிப்ரவரி 2022 இல் இந்தியாவில் ரூ. 23,999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.24,999 விலைக்கு வந்தது. OnePlus இந்த ஆண்டு விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால், வரவிருக்கும் OnePlus Nord CE 3 இதே விலை வரம்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
MySmartPrice வழங்கிய தகவலின் படி, OnePlus Nord CE 3 5G இன் புகைப்படம் யூனிபாடி வடிவமைப்பைக் காட்டுகிறது. பின்புறத்தில் டிரிபிள் கேமராக்களுக்கான இரண்டு பெரிய கட்அவுட் உடன் காட்சியளிக்கிறது. பளபளப்பான பின்புறத்துடன் பச்சை நிற வேரியண்ட் மாடல் புகைப்படம் காணப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மற்ற விபரங்களை பற்றிப் பார்க்கையில், இது Snapdragon 782G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord CE 2 5G போனில் பட்ஜெட் விலையில் முன்பை விட பெரிய பேட்டரி மற்றும் சிறந்த அம்சங்களா?
இதில் காணப்படும் மற்றொரு பெரிய மேம்படுத்தல் என்றால், அது டிஸ்பிளே அளவு தான். இது 6.43 இன்ச் டிஸ்பிளேவுக்கு பதிலாக 6.72' இன்ச் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த டிவைஸ் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் முழு-HD+ தெளிவுத்திறனுடன் கூடிய AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனம் 50 மெகாபிக்சல் IMX890 கேமரா சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகிவற்றை கொண்டிருக்கும். OnePlus Nord CE 3 5G செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும். இந்த OnePlus Nord CE 3 சாதனம் 80W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் புதிய 5,000mAh பேட்டரியை பேக் செய்யும்.

OnePlus Nord CE 2 5G போனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
இந்த விலை வரம்பில் உள்ள போன்களுக்கான ட்ரெண்ட்செட்டராக புதிய OnePlus Nord CE 3 சாதனம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள OnePlus Nord CE 2 5G ஆனது USB Type-C வழியாக 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, OnePlus அதன் மலிவு விலை Nord தொடரை இந்தியாவில் இன்னும் புதுப்பிக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனம் தனது முதன்மையான OnePlus Nord 11 5G ஐ Hasselblad கேமராக்கள் மற்றும் Snapdragon 8 Gen 2 SoC உடன் அறிமுகப்படுத்தியது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 பிளஸ் SoC உடன் டோன்-டவுன் OnePlus 11R அறிமுகப்படுத்தியுள்ளது. OnePlus Nord CE 3 வருகைக்காக பட்ஜெட் பிரியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








