நம்பவே முடியாத விலை.. 36 மணிநேர பேட்டரி லைஃப்.. 4.6 கிராம் வெயிட்.. OnePlus Nord Buds 2R அறிமுகம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை இயர்பட்ஸாக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் (OnePlus Nord Buds 2R) இன்று இந்தியாவில் அறிமுகமானது. மொத்தம் 36 மணிநேர பேட்டரி லைஃப் உடன் வரும் இந்த இயர்பட்ஸின் விலை மற்றும் அம்சங்கள் என்ன? எப்போது விற்பனை? இதோ விவரங்கள்:
விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர்-ன் விலை ரூ.2,199 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டீப் கிரே மற்றும் டிரிபிள் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்க்ளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் ஆனது முன்னதாக வெளியான ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2-ஐ விட மலிவானதாக இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.2,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர்-இல் ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation) ஆதரவு கிடையாது. ஆனால் இந்த அம்சம், சற்றே விலை அதிகமான ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2-வில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் அம்சங்கள்:ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது பிளாஸ்டிக் இயர்பட் கேஸிங்கில் பொருத்தப்பட்டுள்ள 12.4மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன் வருகிறது. கூடவே ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யும் டைரக் ஆடிடோ ட்யூனர் (Dirac Audio Tuner) அம்சத்தையும் கொண்டுள்ளது.
இந்த புதிய ஒன்பிளஸ் இயர்பட்களில் இரண்டு மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகள் நிறுவனத்தின் ஏஐ கிளியர் கால் அல்காரித்துடன் (AI Clear Call Algorithm) ஆகியவற்றுடன் இணைந்து வாய்ஸ் கால்களின் போது சத்தத்தை குறைக்கும் வகையில் சுற்றுப்புற சத்தத்தை ஃபில்டர் செய்வது மற்றும் மனித குரல்களை கண்டறிவது போன்ற செயல்பாடுகளை செய்யும்.
ஒவ்வொரு இயர்பட்டும் 36எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன. அவைகள் எட்டு மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குகின்றன. மறுகையில் உள்ள சார்ஜிங் கேஸில் 480எம்ஏஎச் செல் உள்ளது, இப்படியாக மொத்தம் 38 மணிநேர பேட்டரி லைஃப்பை சேர்க்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் கேஸில், சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது. இது ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உடன் வருகிறது. மேலும் ஒன்பிளஸ் 6 மற்றும் அதன் பிறகு வந்த புதிய ஸ்மார்ட்போன்களில் உள்ள ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர் (OnePlus Fast Pair) அம்சத்தை பயன்படுத்தியும் இதை கனெக்ட் செய்ய முடியும்.
ஒன்பிளஸ் போன்கள் இல்லாத பயனர்கள் ஆண்ட்ராய்டில் உள்ள ஹேமெலடி (HeyMelody) ஆப் வழியாகஇந்த இயர்பட்களை கனெக்ட் செய்ய முடியும். இந்த இயர்பட்ஸ் ஐஓஎஸ் வெர்ஷனை ஆதரிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக இது நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் ஒவ்வொரு இயர்பட்டும் சுமார் 4.3 கிராம் மட்டுமே உள்ளன.


Click it and Unblock the Notifications








