Home
News

36 மணி நேர பிளேபேக் டைம் உடன் புது OnePlus Nord Buds 2! விலை இவ்வளவு தானா?

OnePlus Nord Buds 2 இந்தியாவில் OnePlus Nord CE 3 Lite 5G உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் 12.4mm டைட்டானியம் டிரைவர் மற்றும் ANC உடன் வருகிறது. இதன் விலை என்ன? எப்போது வாங்க கிடைக்கும்?

ஒன்பிளஸ் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த, OnePlus Nord Buds 2 சாதனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஒன்பிளஸ் பிராண்டின் சமீபத்திய Nord Buds TWS ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மே 2022 இல் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus Nord Buds சாதனத்தின் வாரிசாகக் களமிறக்கப்பட்டுள்ளது.

36 மணி நேர பிளேபேக் டைம் உடன் புது OnePlus Nord Buds 2! விலை என்ன?

சமீபத்திய OnePlus Nord Buds 2 வெளியீடு அதன் முன்னோடியை போல அதே 12.4mm டிரைவர் அமைப்புடன் வருகிறது. இது இணைப்பிற்கான சமீபத்திய புளூடூத் 5.3 இணைப்புடன் வருகிறது. ஆனால், புதிய OnePlus Nord Buds 2 ஆனது 12.4mm டைட்டானியம் டிரைவர் உடன் வருகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, OnePlus Nord Buds 2 ஆனது 5 மணிநேர பிளேபேக்கை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உடன் வழங்குகிறது.

அதேபோல், இந்த OnePlus Nord Buds 2 இயர்பட்ஸ் ஆனது ANC ஆஃப் செய்யப்பட்டுள்ள நேரத்தில் 7 மணி நேரத்திற்கு மேல் பயன்பாட்டை வழங்குகிறது. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 பாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 10 நிமிட சார்ஜிங்கில் 5 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் இந்த இன்-இயர் TWS இயர்பட்ஸ் எக்ஸ்சேஜ் இயர் டிப்ஸ் உடன் வருகிறது.

இந்த சாதனம் IP55 சான்றிதழ் உடன் மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. பாஸ்ட் பேரிங் இணைக்கும் அம்சத்தையும் இந்த TWS இயர்பட்ஸ்கள் கொண்டுள்ளது. OnePlius Fast Pair மற்றும் 94ms லோ-லாடென்சி உடன் வருகின்றது. வாய்ஸ் கால் மற்றும் மியூசிக் பிளேபேக் கண்ட்ரோளுக்கான டச் இன்டராக்ஷன் ஒவ்வொரு இயர்பட்ஸிலும் உள்ளது.

36 மணி நேர பிளேபேக் டைம் உடன் புது OnePlus Nord Buds 2! விலை என்ன?

கூடுதலாக, OnePlus Nord Buds 2 ஆனது Dolby Atmos ஆதரவு, Dirac Tuner, Sound Master Equalizer மற்றும் HeyMelody பயன்பாட்டு போன்றவை இதில் உள்ளது. OnePlus Nord Buds 2 இன் சார்ஜிங் கேஸ் 36 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. சார்ஜ் செய்வதற்கு USB Type-C போர்ட்டுடன் வருகிறது. OnePlus Nord Buds 2 ஆனது லைட்னிங் ஒயிட் மற்றும் தண்டர் கிரே நிறங்களில் கிடைக்கும்.

இது ஏப்ரல் 11 முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும். இந்த TWS இயர்பட்களின் விலை இந்தியாவில் ரூ.2,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது Flipkart, Amazon, OnePlus.in மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருந்து வாங்க கிடைக்கும். ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை ஐசிஐசிஐ வங்கி கார்டு பயனர்களுக்கு EMI பரிவர்த்தனைகளில் ரூ.200 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. பட்ஜெட்டில் வாங்க பெஸ்ட் TWS-ஆக இது மாறப்போகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds 2 with 36 hours of playback time Is it worth the price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X