OnePlus Nord Buds 2 வெறித்தனமா இருக்கே.! 10 நிமிட பாஸ்ட் சார்ஜிங்! 36 மணி நேர பிளே பேக்!
OnePlus Nord Buds 2 இந்தியாவில் OnePlus Nord Buds இன் வாரிசாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த சாதனம் OnePlus Buds Ace-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும். OnePlus Nord Buds 2 ஆனது நான்கு மைக்ரோஃபோன்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus, OnePlus Nord CE 3 Lite உடன் இணைந்து, ஏப்ரல் 4 ஆம் தேதி இந்தியாவில் புதிதாக OnePlus Nord Buds 2 இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், இதன் அறிமுகத்திற்கு முன்னதாக, டிப்ஸ்டர் முகுல் ஷர்மா, வரவிருக்கும் இயர்பட்ஸ்களின் சில அம்சங்களைக் லீக் செய்துள்ளார். ஷர்மாவின் கூற்றுப்படி, வரவிருக்கும் OnePlus Nord Buds 2 சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறதாம்.

இதில் 25dB ANC, அதன் முன்னோடி மாடலுடன் ஒப்பிடும் போது பெரிய பேட்டரி மற்றும் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற இன்னும் பல கலக்கல் அம்சங்களுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த இயர்பட்களில் 25dB வரை ANC இருக்கும். இந்த ட்ரூலி வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் சாதனம் 12.4 மிமீ டைனமிக் டைட்டானியம் டிரைவர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இவை வேகமான சார்ஜிங் ஆதரவுடன் ஒரு முறை சார்ஜில் 36 மணிநேரம் வரை இடைவெளி இல்லாமல் நான்-ஸ்டாப் ஆக செயல்படும் என்றும் டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. கூடுதலாக, வரவிருக்கும் OnePlus Nord Buds 2 சாதனம் நான்கு மைக்ரோஃபோன்கள் மற்றும் IP55 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது லைட்னிங் ஒயிட் மற்றும் தண்டர் கிரே ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அசல் ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ், டால்பி அட்மோஸ் ஆதரவு மற்றும் ஒன்பிளஸ் சவுண்ட் ட்யூனிங் தொழில்நுட்பத்துடன் 12.4 மிமீ டைட்டானியம் டிரைவர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இதில் ANC அம்சம் வழங்கப்படவில்லை. அதேபோல், இது IPX55 வாட்டர் மற்றும் டஸ்ட் ம்திப்பீட்டையும் கொண்டிருந்தது. இருப்பினும், ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 30 மணிநேர மியூசிக் பிளேபேக்கை மட்டுமே வழங்கியது.
ஆனால், நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 ஆனது 36 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 சாதனம் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்பதைக் குறிக்கும் வகையில் , "... 10 நிமிட ஜூஸ் உங்களுக்கு 5 மணிநேர பிளேபேக் நேரத்தை பெறும்" என்று நிறுவனம் சமீபத்தில் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனத்துடன் நிறுவனத்தின் புதிய மலிவு விலை 5ஜி போன் மாடலான OnePlus Nord CE 3 Lite 5G மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன் ஒன்பிளஸ் வரிசையில் கிடைத்திடாத மிகவும் மலிவு விலை சாதனமாக இருக்குமென்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ.20,000-திற்குள் இருக்குமென்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








