உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் நோர்ட் அறிமுகம் விழாவை உலகின் முதல் ஏஆர் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 அறிமுகம்!

இந்த அறிமுகம் நிகழ்ச்சி ஜூலை 21 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏ.ஆர் நிகழ்வைப் பயனர்கள் நேரலை காணக் கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இல் கிடைக்கும் ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் ஆப் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஏஆர் ஆப் மூலம் மட்டுமே, இந்த உலகின் முதல் ஏஆர் அறிமுகத்தைப் பயனர்கள் அனுபவிக்க முடியும். இந்த புதுமையான அறிமுகத்தின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் ஒரு சிறப்பு அழைப்பிதழ்களை வடிவமைத்துள்ளது, இது AR தொழில்நுட்பத்தின் மூலம் ஒன்பிளஸ் நோர்டின் முழு அனுபவத்தைப் பயனர்களுக்கு ஏஆர் மூலம் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த சிறப்பு அழைப்பிதழ், Amazon.in தளத்தில் வெறும் ரூ .99 என்ற விலையில் ஜூலை 11 முதல் கிடைக்கிறது. AR வெளியீட்டு அழைப்பிதழ்களை வாங்கும் பயனர்களுக்கு வெளியீட்டு நாளில் நடைபெறும் அமேசான் லாட்டரியில் பங்கேற்கவும், உறுதிப்படுத்தப்பட்ட பரிசுகளை வெல்லவும் வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் AR வெளியீட்டு அழைப்பிதழை எவ்வாறு பயன்படுத்துவது?

  • கூகிள் Play Store மற்றும் ஆப்பிள் App Store இல் இருந்து ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • ஏஆர் பயன்பாட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவி, AR அனுபவத்திற்குத் தேவையான அனுமதிகளை வழங்குங்கள்.
  • AR WEB அனுபவத்தைத் தொடங்க அழைப்பிதழில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் சொந்த கேமரா பயன்பாடு மூலம் ஸ்கேன் செய்யலாம் (ஆண்ட்ராய்டு 9 மற்றும் 10 பயனர்கள்), அல்லது கூகிள் லென்ஸ் கேமரா அல்லது எந்தவித QRcodescanner பயன்பாடு மூலமும் உங்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
  • WEB AR அனுபவத்தைத் துவங்கிய உடன், வரவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தின் AR அனுபவத்தை அனுபவிக்க உங்கள் கையில் உள்ள நோர்ட் அழைப்பிதழை ஸ்கேன் செய்யுங்கள்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஒன்பிளஸ் நோர்ட் Instagram மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் ஏ.ஆர் website வலைத்தள பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ஒன்பிளஸ் நோர்ட் AR பயன்பாட்டைப் பயன்படுத்துதல்

  • Play Store மற்றும் App Store இல் இருந்து ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.
  • AR பயன்பாட்டை நிறுவி, AR அனுபவத்திற்குத் தேவையான அனுமதிகளை ஏற்கவும்.
  • பயன்பாட்டைத் துவக்கி வழிமுறைகளைப் பின்பற்றவும், பிறகு உங்கள் அவதார் மற்றும் பயன்பாட்டை அமைக்கவும்.

AR வெளியீட்டு விழா நிகழ்ச்சியை எப்படி AR பயன்பாடு மூலம் பார்ப்பது?

  • ஜூலை 21, 2020 அன்று IST இரவு 7.30 மணி அளவில் ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் பயன்பாட்டைத் திறக்கவும்.
  • அதிவேக AR அனுபவத்தைத் தொடங்க உங்கள் ஸ்மார்ட்போனின் திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • AR ஸ்ட்ரீமிங் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க உங்களுக்கு நல்ல இணைய இணைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் முன்பதிவு Amazon.in தளத்தில் ஜூலை 15ம் தேதி முதல் வெறும் ரூ.499 என்ற முன்பதிவு விலையில் தொடங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்குப் பயனர்கள் அமேசான் தளத்தில் உள்ள Notify me ஆப்ஷனை கிளிக் செய்யலாம் அல்லது ஒன்பிளஸ் நோர்ட் Instagram பக்கத்தைப் பின்தொடரலாம் அல்லது ஒன்பிளஸ் நோர்ட் ஏஆர் website வலைத்தளத்தைப் பின்பற்றலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Nord AR Launch Invitations On Sale From July 11 at 12 noon IST on Amazon.in : Read more about this in Tamil GizBot
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X