புலம்பலில் இருந்த "இந்த" OnePlus பயனர்களுக்கு புது அப்டேட்.! ஒரே அப்டேட்ல வாயை அடைச்சுட்டாங்க.!

|

OnePlus இந்தியாவில் OnePlus Nord 5G மற்றும் OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சாப்ட்வேர் அப்டேட்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சமீபத்திய ஃபார்ம்வேர் அப்டேட்கள் ஜியோ 5ஜி ஆதரவைக் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், சமீபத்திய அப்டேட் 5ஜி ஆதரவுடன் இன்னும் சில அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. அது என்ன என்பதைப் பார்க்கலாம்.

OnePlus நிறுவனம் வெளியிட்ட புதிய சாப்ட்வேர் அப்டேட்.!

OnePlus நிறுவனம் வெளியிட்ட புதிய சாப்ட்வேர் அப்டேட்.!

தெரியாதவர்களுக்கு, OnePlus நிறுவனம் ஏற்கனவே அதன் பெரும்பாலான OnePlus தொடர் சாதனங்களுக்கு Jio 5G ஆதரவு அப்டேட்டை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முறையான அறிவிப்பை வெளியிட OnePlus அதன் OnePlus Community சமூக மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஜியோ 5ஜி ஆதரவுடன், புதிய ஃபார்ம்வேர் அப்டேட்கள் (firmware update) இப்போது அக்டோபர் 2022 ஆண்ட்ராய்டு சேப்டி பேட்சுடன் வெளிவந்துள்ளது.

OnePlus Nord மற்றும் OnePlus Nord CE 5G போன் பயனர்களுக்கு ஃபார்ம்வேர் அப்டேட்

OnePlus Nord மற்றும் OnePlus Nord CE 5G போன் பயனர்களுக்கு ஃபார்ம்வேர் அப்டேட்

OnePlus Nord 5G மற்றும் OnePlus Nord CE 5G ஆகியவை ஏற்கனவே Airtel 5G நெட்வொர்க்குடன் இணக்கமாக உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இதுவரை இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஜியோ 5ஜி ஆதரவில் இருந்து மட்டுமே இணைக்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அப்டேட்டிற்கு பிறகு, OnePlus Nord மற்றும் OnePlus Nord CE 5G பயனர்கள் இப்போது Airtel மற்றும் Jio நெட்வொர்க்குடன் 5G சேவைகளை அனுபவிக்கலாம்.

அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!அதிரடி தள்ளுபடி: ரூ.5000 முதல் HD Android Tv-ஆ? டக்குனு வாங்கிடுங்க ஸ்டாக் கம்மியா இருக்கு.!

ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி இனி இந்த OnePlus போன்களில்

ஏர்டெல் 5ஜி பிளஸ் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி இனி இந்த OnePlus போன்களில்

தெரியாதவர்களுக்கு, கடந்த மாதம், நாட்டில் 5ஜி சேவை அறிவிக்கப்பட்டது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5G நெட்வொர்க்கை வெளியிடத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஏர்டெல் 5ஜி பிளஸ் 8 நகரங்களில் கிடைக்கிறது. அதேசமயம், ஜியோ ட்ரூ 5ஜி சேவை நான்கு நகரங்களில் கிடைக்கிறது. சரி, இந்த புதிய அப்டேட்கள் நோர்ட் சீரிஸ் போன்களில் என்ன மாற்றங்களைத் தருகிறது என்று பார்ப்போம்.

2023-ல 2023-ல "இந்த" Vivo போனை தான் எல்லாரும் போட்டி போட்டு வாங்க போறாங்க.! ஏன் தெரியுமா?

OnePlus Nord F.16 அப்டேட்

OnePlus Nord F.16 அப்டேட்

OnePlus இந்தியாவில் OnePlus Nord 5G ஸ்மார்ட்போனுக்கான OxygenOS 12 F.16 அப்டேட்டை இப்போது வெளியிடுகிறது. இந்த அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு AC2001_11_F.16 உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பேட்சை அக்டோபர் 2022 வரை மேம்படுத்துகிறது. மேலும் OnePlus Nord 5G போனுக்கான Jio 5G ஆதரவையும் வழங்குகிறது.

1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!1 இல்ல தினமும் 2 ஜிபி தராங்க.! Jio-ல அதிகமா ரீசார்ஜ் செய்யப்பட்ட ரீசார்ஜ் பிளான்.! உடனே பாருங்க.!

ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13 "இந்த" ஸ்மார்ட்போனுக்கு உண்டா?

இது தவிர, இந்த புதிய அப்டேட் சிஸ்டம் ஸ்டேபிளிட்டி மற்றும் லிக்விடிட்டியை மேம்படுத்துகிறது. OnePlus Nord 5G ஆனது ஜூலை 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 13 ஐப் பெற தகுதியற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், OnePlus நிறுவனம், ஜூலை 2023 வரை இந்த சாதனத்திற்கான Android பாதுகாப்பு பேட்ச் அப்டேட்களை வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!iPhone மற்றும் iPad டிவைஸ்களை மூளை மூலம் இயக்கலாமா? நம்ப முடியாத முயற்சி வெற்றி.!

OnePlus Nord CE C.08 அப்டேட்

OnePlus Nord CE C.08 அப்டேட்

OnePlus Nord CE 5G, ஜூன் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கான OxygenOS 12 C.08 அப்டேட்டை நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளதால், இப்போது Jio 5G உடன் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களால் இணக்கமாக இணைய முடியும். இந்த அப்டேட் ஃபார்ம்வேர் பதிப்பு EB2101_11.C.08 உடன் வருகிறது. மேலும் OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு அக்டோபர் 2022 உடன் இந்த அப்டேட் வெளி வருகிறது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

OnePlus Nord CE 5G பயனர்களே ரெடியா?

OnePlus Nord CE 5G பயனர்களே ரெடியா?

OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன் ஆனது Android 13 புதுப்பிப்பைப் பெற தகுதியுடையது. இருப்பினும், H1, 2023 இல் ஸ்மார்ட்போனுக்கான OxygenOS 13 ஓபன் பீட்டா புதுப்பிப்பை வெளியிட OnePlus திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் வலைப்பக்க தகவல் குறிப்பிடுகிறது. உங்கள் செட்டிங்ஸ் மெனு சென்று அப்டேட்டை இன்ஸ்டால் செய்து, ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி நெட்வொர்க் உடன் இணைந்து, புதிய ஜெனெரேஷன் வேகத்தைப் பயன்படுத்திப் பாருங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5G and Nord CE 5G Gets October 2022 Android Security Patch With Jio 5G Support Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X