1 இல்ல 2 புதிய OnePlus போன்கள்.. ஒன்னு 7000mAh, இன்னொன்னு 7100mAh.. பவர்புல் சிப்செட்.. மிட்ரேன்ஜ் விலையில்!
நேற்று வரையிலாக ஜூலை 8 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படலாம் என்கிற பேச்சுக்கள் (லீக்ஸ்) அடிபட்டு வந்த நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது அதன் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் (OnePlus Nord 5 Series) ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை அதிகாரப்பூர்வாமாக உறுதிப்படுத்தியுள்ளது
ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த ஒரு சிறிய டீஸர் வீடியோவானது ஒன்பிளஸ் க்ளோபல் எக்ஸ் அக்கவுண்ட் (OnePlus Global X Account) மூலம் பகிரப்பட்டது. இருப்பினும், அந்த பதிவு வெளியான வேகத்தில் நீக்கப்பட்டுள்ளது. அது நீக்கப்படுவதற்குள் தான் எடுத்த சில ஸ்க்ரீன்ஷார்ட்களை டிப்ஸ்டர் முகுல் சர்மா (Tipster Mukul Sharma) பகிர்ந்துள்ளார்!

அதன் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸின் கீழ் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது. அது ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) மாடல்களாக இருக்கலாம், மேலும் முகுல் சர்மா பகிர்ந்துள்ள ஸ்க்ரீன்ஷர்டில் "டிராகன் ஸ்பீட்ஸ் எலைட் பெர்பார்மென்ஸ்" என்கிற வாசகத்தையும் பார்க்க முடிகிறது.
மேலும் இந்த டீஸரின் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் கேமரா வடிவமைப்பை பற்றிய ஒரு பார்வையும் நமக்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது செங்குத்தாக சீரமைக்கப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கிறது ; இது பழைய ஒன்பிளஸ் நோர்ட் 4 மாடலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
இருப்பினும் இது இன்னுமும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளது ஆக ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிசனின் (OnePlus Ace 5 Racing Edition) ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கவும் வாய்ப்புள்ளது.சீனாவில் ஏஸ் சீரிஸின் கீழ் வரும் மாடல்கள் உலகளவில் நோர்ட் சீரிஸின் கீழ் வருவது வழக்கம் தான்!
ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.35,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனானது சுமார் ரூ.25,000 அல்லது அதற்கு சற்று அதிகமான விலை நிர்ணயத்தை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC) கொண்டு இயக்கப்படலாம்
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்க்கலாம்? இது ஃபுல் எச்டி ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350) கொண்டு இயக்கப்படலாம்
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7100mAh பேட்டரியை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








