OnePlus-ன் அடுத்த புது போன்.. மிட்-ரேன்ஜ் விலையில் 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், Snapdragon 8s Gen 3 சிப்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலின் இந்திய விற்பனை தொடங்கிய வேகத்திலேயே.. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களான - ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் (OnePlus Nord 5 Series) மாடல்களின் அறிமுக தேதி, முக்கிய அம்சங்கள், விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஆகிய 2 மாடல்கள் வருகிற 2025 ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் (Tipster Yogesh Brar) சமூக ஊடக பதிவை அடிப்படையாக கொண்டது. இருப்பினும் குறிப்பிட்ட எக்ஸ் பதிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் அறிமுகமாகும் தேதி ஜூலை 8 ஆக இருக்குமா என்பதில் தெளிவு இல்லை. ஆனால் ஜூலை 8 என்கிற தேதியானது குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மிகவும் அருகில் இருப்பதை உறுதி செய்கிறது. இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்று எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்க்கலாம்?
- 6.74-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே
- 1.5கே ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC)
- 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா
- 16எம்பி செல்பீ கேமரா
- 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்க்கலாம்?
- 6.7-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே
- ஃபுல் எச்டி ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350)
- 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா
- 16எம்பி செல்பீ கேமரா
- 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 7100mAh பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.35,000 க்கும் குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனானது சுமார் ரூ.25,000 அல்லது அதற்கு சற்று அதிகமான விலை நிர்ணயத்தை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








