Home
News

ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் ஆதரவைப் பெற்ற ஒரு ஸ்மார்ட்போன் (smartphone) சீரிஸ் என்றால், நாம் கட்டாயமாக ஒன்பிளஸ் நார்ட் (OnePlus Nord) சீரிஸ் மாடல்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். காரணம், இது பட்ஜெட் விலையில் பெஸ்டான புது அம்சங்களைக் கொண்டுவருகிறது.

பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களின் கவனத்தில் Oneplus Nord என்ற வார்த்தை பதிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப் பல கவனங்களை ஈர்த்த சீரிஸ் வரிசையில் மற்றொரு புது ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.

ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.!

பட்ஜெட் செக்மென்ட்டில் தாறுமாறு அம்சங்களுடன் ரெடியாகும் ஒன்பிளஸ் நார்ட் 3.!

அது தான், ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) என்ற சாதனம். இந்த ஆண்டில் இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் இதன் சில முக்கிய அம்சங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

OnePlus நிறுவனத்திடம் இருந்து வெளிவரத் தயாராகும் இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் 3 சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான OnePlus 11 மற்றும் OnePlus 11R ஆகிய மாடல்களை வரும் வாரத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதற்குப் பின், நிறுவனம் ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) ஆகிய இரண்டு நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 11 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, OnePlus Nord 3 விபரங்கள் மற்றும் ரெண்டர் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அடேங்கப்பா.! முதல் முறையாக Nord போனில் 1.5K AMOLED டிஸ்பிளேவா?

இதனுடன், வரவிருக்கும் OnePlus Nord 3 இன் விவரக்குறிப்புகளும், முக்கிய சிறப்பம்சங்களைக் கசிந்துள்ளன. இதன்படி, நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய OnePlus Nord 3 மாடல், கடந்த ஆண்டு வெளியான OnePlus Nord 2T மாடலின் வாரிசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது MediaTek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. OnePlus Nord 3 சாதனம் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K தெளிவுத்திறன் கொண்ட 6.74' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை வழங்கும்.

ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் இன் கீழ் உயர் தெளிவுத்திறன் டிஸ்ப்ளே இடம்பெறும் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது தெளிவாகிறது. அதேபோல், இந்த போனின் லீக்கான ஸ்கெட்ச்சிங்க் படி, இது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதன் கேமரா அமைப்பு Nord 2T போன்றே தெரிகிறது. இந்த போனின் பிரைமரி கேமரா விபரம் நமக்குத் தெரியவில்லை. ஆனால், இது 64MP ஆம்னிவிஷன் சென்சார் அல்லது 50MP Sony IMX890 சென்சாராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.!

முதல் முறையாக மின்னல் வேக சார்ஜிங் கூட ஒன்பிளஸ் நார்ட் 3 இல் வரப்போகுதா?

இத்துடன் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP லென்ஸ் இணைக்கப்படலாம் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. OnePlus Nord 3 ஆனது 5000mAh பேட்டரியை 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட முதல் Nord பிராண்டட் ஸ்மார்ட்போனும் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தெரியாதவர்களுக்கு, OnePlus Nord 2 மற்றும் OnePlus Nord 2T ஆகியவை முறையே 65W மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் மட்டும் வருகிறது. அதேபோல், இந்த ஒன்பிளஸ் நார்ட் 3 டிவைஸ் ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 13 உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் பிராண்டிற்கு பிரத்தியேகமான அலெர்ட் ஸ்லைடர் பட்டனையும் நார்ட் டிவைஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 1.5K AMOLED டிஸ்பிளே மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது என்றால், இந்த போனை வாங்க மக்கள் கட்டாயம் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 Specifications Leaked Online With 1.5K AMOLED Display and 100W Fast Charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X