டாப் கிளாஸ் போன்கள் எல்லாம் இந்த பட்ஜெட் போன்கிட்ட பல்பு வாங்க போகுது! OnePlus Nord 3 ரெடி!
ஒன்பிளஸ் நிறுவனம் உலகளவில் இன்று அதிக மக்களால் விரும்பப்படும் ஒரு நம்பகமான பிராண்ட்டாக மாறியுள்ளது. OnePlus நிறுவனம் இதுவரை பல ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வெளிவரும் மாடல் தான் OnePlus Nord 3.
சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்ட் 3 லைட் என்ற மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. இது உண்மையில், அதிக மக்களால் ஈர்க்கப்பட்ட பெஸ்ட் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் மாடலாக உருமாறியது. இதனை தொடர்ந்து நிறுவனம் தற்போது ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) என்ற அடுத்த புது வரவு ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக, இதன் ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்ச விபரங்கள் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை விபரமும் கூட இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்த OnePlus Nord 3 சாதனத்தின் விலை என்னவாக இருக்குமென்பதை அறிந்துகொள்ள, இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.
OnePlus Nord 3 ஆனது, சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 2V இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும். ஆனால், வேறு பின்புற கேமரா சென்சார் கொண்டதாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. இது அலெர்ட் ஸ்லைடரைக் கொண்டுள்ளது. அதேபோல், ஒரு இன்ப்ராரெட் சென்சாரை கொண்டிருக்கும். சமீபத்தில் கீக்பெஞ்ச் பட்டியலிலும் இந்த ஃபோன் வெளிவந்தது.
6.74' இன்ச் உடன் 2772 × 1240 பிக்சல்கள் கொண்ட 120Hz/90Hz/60Hz/45Hz/40Hz அடாப்டிவ் அம்சத்தை ஆதரிக்கும் AMOLED டிஸ்ப்ளேவை இந்த போன் கொண்டுள்ளது. இது Mali-G710 10 கோர் GPU உடன் 3.05GHz ஆக்டா கோர் டைமன்சிட்டி 9000 4nm பிராசஸர் உடன் வருகிறது. இது 8ஜிபி LPDDR5X ரேம் உடன் 128 ஜிபி UFS 3.1 உடன் மற்றும் 16ஜிபி ரேம் உடன் 256 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

ஆக்சிஜன்ஓஎஸ் 13 உடன் ஆண்ட்ராய்டு 13 உடன் வருகிறது. இந்த சாதனம் OIS உடன் 50MP பின்புற கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ் மற்றும் 16MP முன்பக்க செல்பி கேமராவுடன் வருகிறது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், 5G SA/ NSA, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz), புளூடூத் 5.3 அம்சத்துடன் வருகிறது.
இது GPS (L1 + L5)/ GLONASS, NFC போன்ற அம்சங்களுடன் வருகிறது. 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த போன் க்ரீன் மற்றும் பிளாக் நிறங்களில் வரும் என்று ரெண்டர்கள் காட்டுகின்றது. இந்த போன் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Nord 3 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.39,870 ஆக இருக்கும். அதேபோல், 16 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.48,750 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் இந்திய அறிமுகம் குறித்த விபரங்களை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications