பின்னி எடுக்கும் டிசைன்.. லீக்கான OnePlus Nord 3 விலை மற்றும் கிளிக்ஸ்!
ஒன்பிளஸ் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) போனின் விலை குறித்த விவரங்களும், அசத்தலான போட்டோக்களும் ட்விட்டரில் கசிந்துள்ளன. ஏற்கனவே, அம்சங்களில் அசத்தும் நோர்ட் 3, இப்போது டிசைனிலும் பின்னி எடுப்பது கூடுதல் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போன் ஜூன் மாதம் வெளியாகும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ஒன்பிளன் நிறுவனம் தேதியை குறிப்பிடவில்லை. இருப்பினும், ஒன்பிளஸ் நோர்ட் 3 போனின் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து, அந்த போனுக்கான எதிர்ப்பார்ப்பை குறையாமல் வைத்து வருகிறது. ஒன்பிளஸ் போன்களின் டிசைன் ஸ்மார்ட்போன் பிரியர்களை வெகுவாக கவரும்படி இருக்கும்.

இதுவரை வெளியான போன்கள், பெரும்பாலும் டிசைன்களுக்கே பெயர் பெற்றவையாக இருக்கின்றன. மிட்-ரேன்ஞ் விலையில் ப்ரீமியம் லூக் மற்றும் பிராண்ட் அனுபவத்தை ஒன்பிளஸ் போன்கள் கொடுக்கும் என்பதால் அவற்றின் விற்பனையும் படுஜோராகவே இருக்கிறது. அதன்படி, இந்தியாவில் கடந்தாண்டு வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 2 (OnePlus Nord 2) போனும் விற்பனையில் சக்கைபோடு போட்டது.
இதனாலேயே அதற்கு அடுத்த வெர்ஷனாக வருவிருக்கும், ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனுக்கும் பலர் காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் போட்டோக்களும், விலை குறித்த விவரங்களும் ட்விட்டரில் (Twitter) கசிந்துள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் ரார் என்பவர் ஒன்பிளஸ் நோர்டு 3 போட்டோக்களையும், விலை விவரங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ஒன்பிளஸ் பிரியர்கள் அதிகமாக ஷேர் செய்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 அம்சங்கள் (OnePlus Nord 3 specifications): இந்த போன் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.74 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு பன்ச் ஹோல் டிஸ்ப்ளே போனாகும். அதில் 1450 பீக் நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. ஆண்டிராய்டு 13 ( Android 13) உடன் ப்ளாக்ஷிப் (Flagship) போன் ரேன்ஞ் போன்களில் கொடுக்கப்படும் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek Dimensity 9000 SoC) கொண்டுள்ளது.
அதேபோல, ஆக்சிஜன் ஓஎஸ் 13 (OxygenOS 13) கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி/16 ஜிபி என 2 வேரியண்ட் ரேம் உடன் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வருகிறது. 50 எம்பி மெயின் கேமராவானது 8 எம்பி செகன்டரி லென்ஸ், 2 எம்பி சென்சார் உடன் வருகிறது. செல்பீ கேமரா 16 எம்பியாக உள்ளது. 80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் விலையை பொறுத்தவரையில் மிட்-ரேன்ஞ் வரிசையில் ரூ.30 ஆயிரம் அல்லது ரூ.32 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








