தூக்குங்கடா அந்த செல்லத்த! இந்த OnePlus போனில் என்னதான் இருக்கு? ரேட் அப்படி பாஸ்!
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களையும் வெயிட்டிங்கில் வெறியேற்றிய ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) போன் அமேசானில் (Amazon) பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த போனுக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு தெரியுமா?
பொதுவாகவே ஒன்பிளஸ் போன்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், அந்த போன்களின் டிசைன், கேமரா, கிராபிக்ஸ் கார்டு பிரீமியம் தரத்தில் இருக்கும். ஆனால், மிட்-ரேன்ஞ் விலையில் விற்பனைக்கு வரும். இதனாலேயே, ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் போன்களை வாங்க திட்டமிட்டவர்கள் பலர் ஒன்பிளஸ் போன்களை வாங்கி வருகின்றனர்.

சொல்லப்போனால், ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்து ஒன்பிளஸ் போன்களுக்கே அதிகமானோர் காத்திருந்த வாங்குகின்றனர். இந்த வரிசையில், ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் மிட்-ரேன்ஞ் விலையை விட சற்று கம்மியான பட்ஜெட்டில், மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட், மாலி ஜி710 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி என பக்க அம்சங்களை கொண்டுள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாகவே, இந்த போன் எப்போது வெளியாகும் என்று ஒன்பிளஸ் பிரியர்கள் வெகுவாக காத்துக்கொண்டிருந்தனர். இப்போது, அந்த காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அமேசானில் ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 3 போனின் முழு அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 அம்சங்கள் (OnePlus Nord 3 Specifications): இந்த ஒன்பிளஸ் போன் 6.74 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek Dimensity 9000 SoC) சிப்செட் வருகிறது. இதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) இருக்கிறது. சிறந்த கேமிங் மற்றும் வீடியோ அனுபவத்திற்காக மாலி ஜி710 ஜிபியு (Mali G710 GPU) கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்டுகளில் வெளியாக உள்ளது.
இந்த ரேம் உடன் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வர வாய்ப்புள்ளது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்று டிரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. சோனி கேமரா சென்சார் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000mAh பேட்டரி வருகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 3 விலை (OnePlus Nord 3 Price) : இந்த போன் ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், ரூ.30 ஆயிரத்துக்கும் கீழ் கூட விற்பனைக்கு வரலாம். இதனால், விற்பனையில் சக்கைப்போடு போடும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications