வந்துட்டான்.. வந்துட்டான்.. அட்டகாச அம்சத்துடன் OnePlus Nord 3 CE! நீங்க கேட்ட அம்சமும் இருக்கு!
OnePlus இரண்டு புதிய Nord தொடர் ஸ்மார்ட்போன்கlளை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. OnePlus Nord 3 மற்றும் OnePlus Nord 3 CE ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஒன்பிளஸ் இப்போது தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு முன்பு சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒரு மைக்ரோசைட் லைவ் இல் உள்ளது. இது இந்த சாதனங்களின் வெளியீடு விரைவில் வருகிறது என்பதை தெரிவிக்கிறது. இந்த வரவிருக்கும் 2 புதிய ஸ்மார்ட்போன்களும், ஜூலை 5 ஆம் தேதி OnePlus Nord Buds 2r உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக இந்த 2 ஸ்மார்ட்போன்களும் பல லீக்ஸ் மூலம் அடிக்கடி இணையத்தில் தென்பட துவங்கியுள்ளன. இரண்டு சாதனங்களின் புதிய விவரங்களையும் காண்பிக்கும் லீக்ஸ் தகவலும் இதில் தென்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. MySmartPrice தளத்தில் சில தினங்களுக்கு முன்பு OnePlus Nord 3 மற்றும் OnePlus Nord CE 3 இன் முக்கிய விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது.
சமீபத்திய வளர்ச்சியில், OnePlus Nord CE 3 இன் லைவ் படங்கள் பிரைஸ்பாபாவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரைஸ்பாபா பகிர்ந்துள்ள படங்களின்படி, வரவிருக்கும் OnePlus Nord CE 3, நவம்பரில் அறிமுகமான Realme 10 Pro+ அம்சத்துடன் ஒத்திருக்கும். கூடுதலாக, பிரைஸ்பாபாவுடன் நம்பகமான டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள தகவலின்படி, வரவிருக்கும் OnePlus Nord CE 3 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வெளிவரும்.
இதில் ஐஆர் பிளாஸ்டர் போன்ற அம்சமும் இடப்பெறும். இந்த சாதனத்தின் டிஸ்பிளேவின் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டைக் கொண்டிருக்கும். இது ஒன்பிளஸ் இன் பிரத்தியேகமான அலெர்ட் ஸ்லைடர் உடன் வரும். இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் முழு HD+ தெளிவுத்திறனுடன் 6.72' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஹூட்டின் கீழ் ஸ்மார்ட்போனை இயக்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் இருக்கலாம்.

இந்த சாதனம் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 13 உடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 ஸ்கின் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா அம்சத்தை பொறுத்தவரை OnePlus Nord CE 3 ஆனது 50MP பிரைமரி கேமராவுடன், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன் பக்கத்தில், சாதனம் 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.
இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். OnePlus Nord CE 3 சிறப்பம்சத்தை பொறுத்தவரை, இது 6.72' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன், முழு HD+ தெளிவுத்திறன், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது குவால்காமின் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 782G சிப்செட் உடன் Adreno 642L GPU உடன் வருகிறது.
.
இது 8ஜிபி/12ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆக்சிஜன்ஓஎஸ் 13 உடன் ஆண்ட்ராய்டு 13 ஐ கொண்டிருக்கும். இது 50MP + 8MP + 2MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16MPசெல்பி கேமராவுடன் வருகிறது. இது டூயல் சிம் கார்டு ஸ்லாட், 5G, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth, GPS, 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C போர்ட் உடன் வருகிறது. இது 5,000mAh உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications