Home
News

மீண்டும் மீண்டுமா? அதுக்குள்ள இவ்வளவு தரமான சிப்செட் கொண்ட OnePlus 5ஜி போன் வருதா? எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கம் முதலே பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துகிறது. குறிப்பாக சியோமி, விவோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். இந்நிலையில் மீண்டும் ஒரு 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ்.

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் இந்த மாதம் கடைசி அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீண்டும் தரமான சிப்செட் கொண்ட OnePlus 5ஜி போன் வருதா?

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். பின்பு OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போன் வெளிவரும்.

மீண்டும் தரமான சிப்செட் கொண்ட OnePlus 5ஜி போன் வருதா?

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

மீண்டும் தரமான சிப்செட் கொண்ட OnePlus 5ஜி போன் வருதா?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 5G phone will be launched in India in July: check specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X