இந்த OnePlus போனுக்கு நீங்களே வெயிட் பண்ணுவீங்க.. எந்த மாடல்?
இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் (OnePlus) போன்களுக்கு மட்டுமே ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆப்பிள் போன்களில் இருக்கும் சிறந்த கேமரா, சாம்சங் போன்களின் இருக்கும் வடிவமைப்புக்கு நிகராக ஒன்பிளஸ் போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கொண்ட போன், ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி.
இதுவரை வெளியான ஒன்பிளஸ் மாடல்களிலேயே அடுத்த லெவல் எதிர்ப்பார்பை ஏற்படுத்திய இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3) எப்போது வெளியாகும் என்று ஸ்மார்ட்போன் பிரியர்கள் வெகுவாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த போனின் அம்சங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. இதனால், அடுத்த சில வாரங்களில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் இந்த போனின் மார்க்கெட்டிங் போட்டோக்கள் வெளியாகி ஒன்பிளஸ் பிரியர்களை மேலும் தூண்டிவிடுட்டுள்ளது. டிசைனில் பின்னிப்பெடல் எடுக்கும்படி இருக்கிறது. அதேபோல, கேமரா, சிப்செட், கிராபிக்ஸ் கார்டு என அம்சங்களிலும் அசத்துகிறது. இந்த போனின் லீக்கான அம்சங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் அம்சங்கள்: இந்த போன் 6.74 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட்டுடன் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த கேமிங், வீடியோ அனுபவத்திற்காக மாலி ஜி710 ஜிபியு (Mali G710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek Dimensity 9000 SoC) சிப்செட் வருகிறது. இதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்டுகளில் வெளியாக உள்ளது. இந்த 16 ஜிபி ரேம் உடன் 12 விர்ச்சுவல் ரேம் இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போன், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்று டிரிபிள் செட்டப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராக்களின் சென்சார்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சோனி சென்சார் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.30,000 முதல் ரூ.32,000 வரையில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இதுபோல மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications