ஆரம்பிக்கலாமா? OnePlus Nord 2T இன்று முதல் விற்பனை.. சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்?

|

பட்ஜெட் விலையில், பிளாக்ஷிப் தரத்திற்கு நிகரான ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை வாங்க ஐடியா இருக்கிறதா? அப்போ, உங்களுடைய கவனம் மொத்தமும் இந்த சூப்பர் ஹாட் ஸ்மார்ட்போன் மாடல் மீது தான் இருக்கவேண்டும். ஒன்பிளஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய OnePlus Nord 2T இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை

OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை

ஒன்பிளஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் மாடலின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த புதிய OnePlus Nord 2T டிவைஸ் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிவைஸ் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. Amazon மற்றும் OnePlus இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக இப்போது இந்த ஒன்பிளஸ் நார்ட் 2டி வாங்குவதற்குக் கிடைக்கிறது. OnePlus Nord 2T டிவைஸை வாங்குவதற்கான அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக நிறுவனம் சில சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் இவ்வளவு சிறபமசங்களா?

பட்ஜெட் விலையில் இவ்வளவு சிறபமசங்களா?

பட்ஜெட் விலையில் சிறந்த டீலாக கிடைக்கப்பெறும் இந்த புதிய OnePlus Nord 2T டிவைஸில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கலாமா? இந்த புதிய ஒன்பிளஸ் நார்ட் 2டி சாதனம் மேம்படுத்தப்பட்ட MediaTek Dimensity சிப்செட் உடன் வருகிறது. இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருகிறது. இந்த அம்சம் அதன் முன்னோடியை விட அதிகமானது என்பது கவனிக்கத்தக்கது. OnePlus Nord 2T இன் டிஸ்பிளே 90Hz AMOLED தரத்தை கொண்டுள்ளது. இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

இந்தியாவில் OnePlus Nord 2T விலை மற்றும் சலுகை

இந்தியாவில் OnePlus Nord 2T விலை மற்றும் சலுகை

இந்தியாவில் OnePlus Nord 2T டிவைஸ் 8ஜிபி ரேம் / 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் / 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வேரியண்ட் மாடல்களில் வருகிறது. இந்த புதிய டிவைஸின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.28,999 ஆகும். அதேபோல், இதன் 12ஜிபி ரேம் / 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை வெறும் ரூ.33,999 ஆகும்.

முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா டிரீட்

முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா டிரீட்

இவை இரண்டும், கிரே ஷேடோ மற்றும் ஜேட் ஃபாக் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த புதிய சாதனத்தின் விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் Amazon மற்றும் OnePlus இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் துவங்கியுள்ளது. இந்த டிவைஸை சலுகையுடன் வாங்கும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா டிரீட் கூட இருக்கிறது என்று நிறுவனம் அறிவித்துளள்ளது.

OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?

OnePlus Nord 2T உடன் கிடைக்கும் சலுகைகள்

OnePlus Nord 2T உடன் கிடைக்கும் சலுகைகள்

OnePlus நிறுவனத்தின் இந்த புதிய OnePlus Nord 2T சாதனத்தின் அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, OnePlus ஆனது ICICI வங்கியின் கிரெடிட் மற்றும் டிடெபிட் கார்டு பயனர்களுக்கு புதிய OnePlus Nord 2T ஐ வாங்கும் போது ரூ.1,500 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு EMI நன்மை, 3 மாத Spotify பிரீமியம் சந்தா ஆகியவற்றை நிறுவனம் வழங்குகிறது. OnePlus ஸ்டோர் பயன்பாட்டில் முதல் 1,000 OnePlus Nord 2T வாங்கும் பயனர்களுக்கு OnePlus Nord Handy Fanny Pack இலவசமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Nord 2T ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

OnePlus Nord 2T ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

OnePlus Nord 2T ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் 6.43' இன்ச் முழு HDதிறன் கொண்ட 90Hz AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 1300 சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான OxygenOS 12.1 இல் இயங்குகிறது. இந்த டிவைஸ் 32MP செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது. இதில் 50MP பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2MP மோனோக்ரோம் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது 4,500mAh பேட்டரியுடன் 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2T Price In India Offer Details and Where To Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X