ரூ.4,000 அறிமுக ஆபர் உடன் இந்தியாவிற்கு வரும் OnePlus Nord 2T; எப்போது?

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 2டி (OnePlus Nord 2T), கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அறிமுக சலுகையின் கீழ் வாங்க கிடைக்கும்? சரியாக எந்த தேதியில், எத்தனை மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? என்கிற ஒரு லீக் தகவல் வெளியாகி உள்ளது.

அதே தவறை மீண்டும் செய்த ஒன்பிளஸ்!

அதே தவறை மீண்டும் செய்த ஒன்பிளஸ்!

நினைவூட்டும் வண்ணம், கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான OnePlus Nord 2T மாடல் ஆனது, கடந்த ஜூன் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை!

அதுமட்டுமின்றி நோர்ட் 2டி மாடலானது தற்செயலாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பட்டியலிடப்பட்டது; ஆனால் அது உடனே அகற்றவும் பட்டது.

தற்போது இந்நிறுவனம் மீண்டும் அதே தவறை செய்தது போல் தெரிகிறது. இந்த முறை ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் நேரத்தை வெளிப்படுத்தும் ஒரு "அதிகாரப்பூர்வ" போஸ்டர் 'லீக்' ஆகி, பல லீக்ஸ்டர்களிடம் ஸ்க்ரீன் ஷாட்களாக சிக்கி, ஆன்லைனில் வலம் வருகிறது.

குறிப்பிட்ட தேதியில் சரியாக இரவு 7.00 மணிக்கு அறிமுகமாகும்!

குறிப்பிட்ட தேதியில் சரியாக இரவு 7.00 மணிக்கு அறிமுகமாகும்!

நன்கு அறியப்பட்ட லீக்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா (Mukul Sharma @stufflistings) வழியாக வெளியான ஒரு லீக் போஸ்டரின் படி, OnePlus Nord 2T ஆனது வருகிற ஜூலை 1 ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்கு அறிமுகமாகும்.

ஆனால் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமோ, இன்னமும் இந்த ஸ்மார்ட்போன் "விரைவில் வரும்" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?Nothing Phone 1 முன்பதிவு ஆரம்பம்: ப்ரீ-ஆர்டர் பாஸ் வாங்குவது எப்படி? என்ன விலை?

கண்டிப்பாக ரூ.30கே பட்ஜெட்டில் தான் வரும்!

கண்டிப்பாக ரூ.30கே பட்ஜெட்டில் தான் வரும்!

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆன 8ஜிபி / 128ஜிபி யூனிட் ரூ.28,999 என்கிற விலைக்கு அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

எப்படி பார்த்தாலும், இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் தான் வரும் என்று நம்பலாம். அதற்கு மேல் வந்தால் நோர்ட் சீரீஸ் ஆனது நிறுவனத்தின் பட்ஜெட் சீரீஸ் என்கிற பெயரே கெட்டுப்போகும்.

அமேசானில் வாங்க கிடைக்கும்; அறிமுக சலுகையும் கிடைக்கும்!

அமேசானில் வாங்க கிடைக்கும்; அறிமுக சலுகையும் கிடைக்கும்!

துல்லியமான விலை தொடர்பான குழப்பங்கள் இருந்தாலும் கூட வரவிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாக, பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை;.

மேலும் OnePlus Nord 2T ஆனது ஷேடோ கிரே மற்றும் ஜேட் ஃபாக் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, இது ரூ.4,000 என்கிற இன்ஸ்டன்ட் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்பதால், இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது!

Samsung Samsung "தயவால்" அறிமுகமாகும் iPhone 14 சீரீஸ்; Apple-க்கு வந்த சத்திய சோதனை!

ரூ.30,000 பட்ஜெட்டுக்கு இது வொர்த்-ஆ?

ரூ.30,000 பட்ஜெட்டுக்கு இது வொர்த்-ஆ?

நாம் பேசுவது போல, இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வந்தால் கண்டிப்பாக வொர்த்து தான்; அதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் OnePlus Nord 2T ஆனது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கும் 6.43-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த OxygenOS 12.1-ஐ கொண்டு இயங்குகிறது. தவிர மீடியாடெக் டைமென்சிட்டி 1300 சிப்செட்டையும் பேக் செய்கிறது. இதன் 80W சூப்பர்வூக் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500எம்ஏஎச் பேட்டரியையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும். செக்யூரிட்டியை பொறுத்தவரை, இது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது.

கேமரா செட்டப் எப்படி?

கேமரா செட்டப் எப்படி?

இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, அதில் OIS சப்போர்ட் உடனான 50MP மெயின் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் + 2MP மோனோக்ரோம் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில், 32MP செல்பீ கேமரா உள்ளது.

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

அறிமுகம் ஆனதும் வாங்கலாமா? வேண்டாமா?

அறிமுகம் ஆனதும் வாங்கலாமா? வேண்டாமா?

பெர்பார்மென்ஸ்-ஐ பொறுத்தவரை அருமையான அனுபவத்தை உறுதி செய்யும் இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான 50எம்பி மெயின் கேமராவையும் பேக் செய்கிறது. உடன் இதன் 80W பாஸ்ட் சார்ஜிங்கும் கவனிக்கத்தக்கது.

ஆனால் இதன் கேமரா செட்டப்பில் உள்ள மோனோ கேமரா மிகவும் அர்த்தமற்றதாக தெரிகிறது. தவிர சந்தையில் வாங்க கிடைக்கும் மற்ற 120Hz டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை விட இது விலை அதிகமாக உள்ளது.

ஆனால், இதை வாங்கலாமா வேண்டாமா என்கிற இறுதி முடிவு உங்களுடையது தான்!

Photo Courtesy: OnePlus

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2T India launch date Company says Coming soon Leak suggests July 1 Check the details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X