அடடா., அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி- 50எம்பி சோனி பிரைமரி கேமரா, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜ்: விலை இதோ

|

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு, க்ரே ஷோடோ மற்றும் ஜேட் ஃபாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது வியாழக் கிழமை உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனமானது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி ஆதரவோடு கூடிய 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.59 இன்ச் டிஸ்ப்ளே காட்சியைக் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி விலை

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி விலை

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி அடிப்படை மாறுபாடானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.32,600 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.40,800 ஆக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் க்ரே ஷேடோ மற்றும் ஜேட் ஃபாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போன் முன்பதிவுக்கு இப்போதே கிடைக்கிறது.

ஒன்பிளஸ்.காம், அமேசான் மூலம் விற்பனை

ஒன்பிளஸ்.காம், அமேசான் மூலம் விற்பனை

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது மே 24 முதல் ஒன்பிளஸ்.காம், அமேசான் உள்ளிட்ட பல தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது டூயல் நானோ சிம் ஆதரவோடு, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது எச்டிஆர் 10+ ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்போடு வருகிறது. ஹூட்டின் கீழ் இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா ஆதரவுகள்

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா ஆதரவுகள்

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இ்நத ஸ்மார்ட்போனானது அபெச்சர் லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஓஐஎஸ் ஆதரவோடு 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை கேமரா உடன் டிரிபிள் பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. 8 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் ஆதரவோடு 120 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவைக் கொண்டிருக்கிறது. அதோடு 2 எம்பி மோனோக்ரோம் மூன்றாவது கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி மற்றும் வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

80 வாட்ஸ் சூப்பர் வூக் வயர்டு சார்ஜிங் ஆதரவு

80 வாட்ஸ் சூப்பர் வூக் வயர்டு சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனானது 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் சூப்பர் வூக் வயர்டு சார்ஜிங் ஆதரவோடு 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. வைஃபை, ப்ளூடூத் வி5.2உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Nord 2T 5G Launched With 50MP Primary Sony Camera, 80W SuperVOOC Charge and More: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X