Oneplus Nord 2T 5G வந்தாச்சு: பட்ஜெட் விலையில் நச்சுனு அம்சம்- கொடுக்குற காசுக்கு தகுமா?

|

OnePlus நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் Nord 2T 5G, இன்று இந்தியாவில் அறிமுகமானது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC போன்ற பிரதான அம்சங்களை பேக் செய்கிறது.

இந்த லேட்டஸ்ட் நோர்ட் சீரீஸ் மாடலின் இந்திய விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை தொடங்கும்? இது வேறு என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? விரிவாக விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி இந்தியாவில் அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு புகழ் பெற்ற ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவு சாதனங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி தற்போது OnePlus Nord 2T 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் விலைக்கேற்ற அம்சங்களை கொண்டிருக்கிறதா என பார்க்கலாம்.

முந்தைய சாதனத்தை விட மேம்பட்ட ஆதரவா?

முந்தைய சாதனத்தை விட மேம்பட்ட ஆதரவா?

கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை விட சற்று மேம்பட்ட அம்சங்களை இந்த நோர்ட் 2டி 5ஜி கொண்டிருக்கிறது. அதாவது இந்த OnePlus Nord 2T 5G ஆனது 90Hz ரெஃப்ரெஷிங் ரேட் AMOLED டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. முந்தைய நோர்ட் 2 5ஜி ஆனது 65W சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் ஆதரவைக் கொண்டிருந்தது.

OnePlus Nord 2T 5G விலை

OnePlus Nord 2T 5G விலை

அம்சங்களை பார்ப்பதற்கு முன்னதாக OnePlus Nord 2T 5G விலை விவரத்தை பார்க்கலாம். OnePlus Nord 2T 5G இந்தியாவில் 8 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.28,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 ஆக இருக்கிறது.

OnePlus Nord 2T கிடைக்கும் தன்மை

OnePlus Nord 2T கிடைக்கும் தன்மை

OnePlus Nord 2T ஆனது ஜூலை 5 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த சாதனம் Gray Shadow மற்றும் Jade Fog வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது. அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸ், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த சாதனம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய Nord 2T 5G சிறப்பம்சங்கள்

புதிய Nord 2T 5G சிறப்பம்சங்கள்

OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Oxygen OS 12.1 மூலம் இயங்குகிறது. 6.43 இன்ச் முழு HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. விலைக்கு ஏற்ற 90Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. HDR10+ சான்றிதழை கொண்ட இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே ஆனது ஹோல் பஞ்ச் டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மேம்பட்ட மீடியாடெக் சிப்செட் அம்சம்

மேம்பட்ட மீடியாடெக் சிப்செட் அம்சம்

ஹூட்டின் கீழ், OnePlus Nord 2T 5G ஆனது ஆக்டோ கோர் MediaTek Dimensity 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது மேம்பட்ட இயக்க ஆதரவை வழங்கும். அடுத்ததாக கேமரா அம்சத்திற்கு வருவோம். இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கிறது. இதன் பிரதான கேமரா சோனி IMX766 ஆகும். கேமரா லென்ஸ்களின் விவரத்தை பார்க்கலாம்.

சோனி IMX766 முதன்மை கேமரா ஆதரவு

சோனி IMX766 முதன்மை கேமரா ஆதரவு

OnePlus Nord 2T 5G சாதனத்தில் 50 எம்பி சோனி IMX766 முதன்மை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் இரண்டாம் நிலை கேமராவாக இருக்கிறது. மூன்றாம் நிலை கேமராவாக 2 எம்பி மோனோக்ரோம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி Sony IMX615 செல்பி கேமராவை இந்த சாதனம் கொண்டிருக்கிறது.

80W SuperVOOC வேகமான சார்ஜிங்

80W SuperVOOC வேகமான சார்ஜிங்

பாதுகாப்பு அம்சத்துக்கு OnePlus Nord 2T 5Gஇன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4,500mAh டூயல் செல் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய 80W SuperVOOC வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தின் எடை 190 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Oneplus Nord 2T 5G Launched in India With 80W SuperVooc Charging, 50MP Sony Camera: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X