ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு சோதனை மேல் சோதனை: வெடித்து சிதறிய சார்ஜர்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக இந்நிறுவனம் பல்வேறு தரமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல்
தனித்துவமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால் சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த சாதனத்தின் விற்பனை துவங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டுவருகிறது அந்நிறுவனம்.

இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் 2 வார்ப் சார்ஜர் வெடித்து சிதறியதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்போனை சார்ஜர் உடன் இணைத்த சில நமிடங்களில் சார்ஜ் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒன்பிளஸ் நிறுவனத்தை ட்விட்டரில் தொடர்பு கொண்டார்.
குறிப்பாக இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒன்பிளஸ் நிறுவனம், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தான் சார்ஜர் வெடித்து சிதறியது எனத் தெரிவித்துள்ளது. தற்போது வெடித்து சிதறிய சார்ஜருக்கு மாற்றாக ஒன்பிளஸ் சார்பில் வேறு சார்ஜர் கொடுக்கப்பட்டதாககூறப்படுகிறது. மேலும் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனத்தில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜிசாதனம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி.
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் நன்றாக தான் இருக்கிறது. ஆனாலும் பல்வேறு பிரச்சனைகள் இந்த சாதனத்தில் உள்ளதாக பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications