OnePlus Nord 2 5G இந்த மாதத்தில் அறிமுகமா? AI அம்சத்துடன் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

|

ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் உடன் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. சில காலமாக இந்த சாதனம் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டது, ஆனால் இப்போது இதன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாகி வருகின்றது. ஒன்ப்ளஸ் நோர்ட் 2 5ஜி, பெயர் குறிப்பிடுவது போல, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அசல் ஒன்பிளஸ் நோர்டுக்கு அடுத்தபடியான மாடலாகும்.

ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி எப்போது அறிமுகம்?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியைப் பகிரவில்லை என்றாலும் கூட, வெளியான சமீபத்திய கசிவுகளின் படி, இது வரும் ஜூலை 24 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி இருக்கின்றது.

மீடியாடெக் டைமன்சிட்டி 1200-AI சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 1200-AI சிப்செட்

ஒன்ப்ளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 1200-AI SoC ஆல் இயக்கப்படும் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் நோர்ட் 2 5 ஜி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 1200-AI SoC ஆல் இயக்கப்படும்.

'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

 ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருகிறதா ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருகிறதா ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி

இந்த பிராசஸரின் செயல்திறன் டிமென்சிட்டி 1200-ஐ விட வித்தியாசமானதாக இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது. இதனால் பயனர்களின் பயன்பாட்டு அனுபவம் மிகவும் சிறப்பானதாக அமையும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவதனால், வீடியோ மற்றும் புகைப்பட அனுபவம் முந்தைய மடலை விட இதில் இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய சந்தையில் அதிக வரவேற்பு

இந்திய சந்தையில் அதிக வரவேற்பு

வெளியான தகவலின்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அறிமுகம் நிகழ்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றால், புதிய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த சாதனம் அமேசான் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 5G will come with some AI-based enhancements for an improved camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X