ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி வெளியீடு: ஜூலை 22 அன்று லைவ்ஸ்ட்ரீங் நிகழ்வைப் எப்படி பார்ப்பது?

|

நீண்ட காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதன்மை ஸ்மார்ட்போன் மாடலான ஒன்ப்ளஸ் நோர்ட் 2 5 ஜி பிரீமியம் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த இரண்டாம் தலைமுறை நோர்ட் ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 22, 2021 அன்று புது வகையான AR நிகழ்வின் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்யத் தயாராகிவிட்டது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி வெளியீடு: ஜூலை 22 லைவ்ஸ்ட்ரீங் பார்ப்பது எப்படி

உங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக, உங்கள் அறையின் வசதியிலிருந்து தனித்துவமான மற்றும் நம்ப முடியாத புது வகை ஸ்மார்ட்போன் வெளியீட்டு அனுபவத்தை நீங்கள் காணப்போகிறீர்கள். இந்த அறிமுக நிகழ்வுடன், நீங்கள் உற்சாகமான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது வெறும் விளையாட்டுப் போட்டி அல்ல, புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் வெல்லும் வாய்ப்பைப் இந்த போட்டி உங்களுக்கு உருவாக்குகிறது என்பதை மறக்கவேண்டாம்.

AR லைவ் ஸ்ட்ரீமிங் பற்றி நாங்கள் அதிகம் பேசுவதற்கு முன்பு, ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்காக ஒன்ப்ளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்கள் எல்லாம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி விவரக்குறிப்பு மற்றும் சிறப்பம்சம்

ஒன்பிளஸ் நோர்ட் 2 டீஸர்கள், கசிவுகள் மற்றும் வதந்திகள் ஏற்கனவே இணையத்தைப் புயலாகத் தாக்கியுள்ளன. அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, புதிய நோர்ட் ஸ்மார்ட்போன் அட்டவணையில் எதைக் கொண்டுவரும் என்பது பற்றிய சில உண்மையான தகவல்கள் நம்மிடம் உள்ளது. ஒன்பிளஸிடம் இருந்து புதிய மீடியா டெக் டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமைமிக்க ஆக்டா-கோர் சிப்செட், இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் அம்சங்களின் சிறந்த சக்தியாக விளங்குகிறது.

மேலும் எந்தவொரு விலைப் புள்ளியிலும் சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக ஒன்பிளஸ் அறியப்பட்டதால், அதிகபட்ச செயல்திறனுக்காக 5 ஜி-இயக்கப்பட்ட சிபியு ஆற்றலை வெளிப்படுத்த ஒன்பிளஸ் பிராண்ட் இம்முறை சிப் மேக்கருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது. மற்ற மீடியாடெக் டைமன்சிட்டி 1200 சிப்செட்டில் இயங்கும் போன்களைப் போலல்லாமல், AI ரெசல்யூஷன் பூஸ்ட் மற்றும் AI கலர் பூஸ்ட் போன்ற பிரத்தியேக அம்சங்களுடன் கூடிய முதல் சாதனமாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 அறிமுகம் செய்யப்படுகிறது. இயந்திர கற்றல் மூலம், இந்த அம்சங்கள் தொலைபேசியின் காட்சி பயனர் அனுபவத்தை இது மேம்படுத்தும்.

90Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50MP குவாட்-கேமரா அமைப்பு

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் முழு எச்டி பிளஸ் கொண்ட 90 ஹெர்ட்ஸ் அமோலேட் டிஸ்பிளேவை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வழங்குகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது சோனி IMX766 சென்சாரில் பணிபுரியும் 50MP முதன்மை சென்சார் உடன் கொண்ட ட்ரிபிள் கேமரா வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இந்த சாதனம் AI- இயக்கப்பட்ட டைமன்சிட்டி 1200 சிப்செட்டில் இயங்குவதால், இது சில தனிப்பட்ட கேமராவை மையமாகக் கொண்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். AI புகைப்பட மேம்பாடு, AI வீடியோ மேம்பாடு மற்றும் அதிர்ச்சியூட்டும் குறைந்த ஒளிப் படங்களை எடுக்கச் சக்திவாய்ந்த நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறையும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆக்ஸிஜன் ஓஎஸ் மற்றும் வார்ப்பு சார்ஜ் 65w பாஸ்ட் சார்ஜிங் அம்சம்

பிரீமியம் ஒன்பிளஸ் சாதனங்களின் முதன்மை-தர பயனர் அனுபவத்தை பாக்கெட்-பிரண்ட்லி விலை புள்ளியில் பெறுவதற்காக, நிறுவனம் ஆக்ஸிஜன் ஓஎஸ்ஸின் சமீபத்திய பதிப்பில் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 சாதனத்தை வெளியிடவுள்ளது. ஒன்பிளஸ் புதிய நோர்ட் ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த வார்பார்ஜ் 65W ஃபாஸ்ட் சார்ஜர் உடன் வெளியாகும். இது வழக்கமாக பிரீமியம் ஒன்பிளஸ் முதன்மை சாதனங்களுடன் கிடைக்கும் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த 4,500 எம்ஏஎச் பேட்டரியை நிறுவனத்தின் வார்ப்பு சார்ஜர் 65W பாஸ்ட் சார்ஜிங் சார்ஜர் வெறும் 35 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. கடைசியாக, நோர்ட் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள அனைத்து 5 ஜி பேண்டுகளையும் இணைப்பிற்காக ஆதரிக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

லைவ்ஸ்ட்ரீமிங்கை எப்படி ஆன்லைனில் பார்ப்பது?

இப்போது நீங்கள் வரப்போகும் புதிய ஒன்பிளஸ் Nord 2 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றிய நியாயமான யோசனையைப் பெற்றிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த AR வெளியீட்டு நிகழ்வை நீங்கள் எவ்வாறு ஸ்ட்ரீம் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். ஒன்பிளஸ் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலமும் மற்றும் இந்நிகழ்வுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சேனலின் வழியாக நேரடி நிகழ்வை ஸ்ட்ரீம் செய்து நாம் பார்க்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஜூலை 22, 2021 அன்று லைவ் ஸ்ட்ரீமைத் தவறவிடாத ரிமைண்டரையும் நீங்கள் இப்போது அமைக்கலாம். ஒன்பிளஸ் ஒரு அற்புதமான போட்டியை நடத்துகிறது, அங்கு நீங்கள் நடப்படும் சேலஞ் போட்டியில் பங்கேற்கலாம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி பரிசுகளை வெல்லலாம். பெரிய பரிசளி பிரிவில் பங்கேற்க சில அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஒன்பிளஸ் குறிப்பிடுகிறது. ஒன்பிளஸ் நடத்தும் இந்த AR போட்டியில் பங்கேற்க முக்கியமான தேதிகள் மற்றும் தேவையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AR சேலஞ் # 1 ஜூலை 12 - ஜூலை 30
முதல் ஏ.ஆர் சவால் 90 ஹெர்ட்ஸ் 'பின்பால்' கேம் விளையாட்டை வழங்கும், இதில் பங்கேற்பாளர்கள் ஃபாஸ்ட் அண்ட் ஸ்மூத் லேன் வழியாகச் செல்ல வேண்டும் மற்றும் சவாலை முடிக்க நியமிக்கப்பட்ட நேரத்தில் 90 ஹெர்ட்ஸ் மதிப்பெண்ணை அடைய வேண்டும்.

AR சேலஞ் # 2 ஜூலை 22 - ஜூலை 30
இரண்டாவது AR சவாலை 'ஒன் டே பவர் சேலஞ்' என்று அழைக்கப்படுகிறது, அங்குச் சவாலை முடிக்க நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 30 தொலைப்பேசிகளை சார்ஜ் செய்ய வேண்டும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஏஆர் வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் பங்கேற்க, nord-ar.oneplus.com/nord-2-5g என்ற வலைப்பக்கத்தைப் பார்வையிட வேண்டும். பின்னர் உங்கள் சாதனத்தின் கேமரா இயக்கம் மற்றும் ஒரியண்டேஷன் சென்சார்களைப் பயன்படுத்த வலைத்தளத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு AR சவாலும் மிகவும் எளிமையானது என்றாலும், எல்லோரும் அதைச் சரியாகச் செய்ய மாட்டார்கள் என்பதனால் நிறுவனம் உங்களுக்குப் பல முறை விளையாட்டை விளையாட அனுமதி வழங்குகிறது. இது உங்களை இறுதி பட்டியலில் இடம் பெறச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 5G Launch How To Watch Livestream Event On July 22 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X