OnePlus Nord 2 5G இந்தியாவில் இன்று விற்பனை.. விலை மற்றும் சலுகை விபரம் இதோ..

|

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி இந்தியாவில் இன்று (ஜூலை 26) விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் தொலைப்பேசி அசல் ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி க்குப் பிறகு நாட்டின் ஒன்பிளஸ் நோர்ட் வரிசையில் மூன்றாவது மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நோர்டின் புது வாரிசாக வருகிறது. இது கடந்த ஆண்டின் மாடலை விடக் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களாக உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எஃப் 3 ஜிடி மற்றும் ரியல்மே எக்ஸ் 7 மேக்ஸ் போன்ற சாதனங்களுக்கு எதிராகப் போட்டியிடுகிறது.

OnePlus Nord 2 5G இந்தியாவில் இன்று விற்பனை..விலை மற்றும் சலுகை விபரம்

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி விலை மற்றும் விற்பனை சலுகைகள்
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ. 27,999 என்ற விலையில் வருகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் ரூ. 29,999 என்ற விலையிலும் மற்றும் இதன் 12 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 34,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஒன்பிளஸ் ரெட் கேபிள் உறுப்பினர் கொண்ட வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி போனின் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி மாடல்களை அமேசான் மற்றும் OnePlus.in மூலம் வாங்கலாம்.

இருப்பினும், அடிப்படை 6 ஜிபி விருப்பம் ஆகஸ்டில் கிடைக்கும். இந்த தொலைப்பேசி தற்போது ப்ளூ ஹேஸ் மற்றும் கிரே சியரா வண்ணங்களில் வருகிறது. இருப்பினும் இது கிரீன் வுட்ஸ் சாயலைப் பெறுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி மீதான விற்பனை சலுகைகள் எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது. இவர்கள் ரூ.1,000 உடனடி தள்ளுபடி மற்றும் விலை இல்லாத ஈ.எம்.ஐ விருப்பங்கள் மற்றும் OnePlus.in மூலமும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக ரூ. 1,000 பரிமாற்ற தள்ளுபடி. மேலும், எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகள் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 2 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அமேசான், OnePlus.in, ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் பிற சில்லறை சேனல்கள் மூலம் ஜூலை 28 முதல் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி சிறப்பம்சம்
ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 இல் இயங்குகிறது . இது 6.43-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 20: 9 விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200-AI சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை முன்பக்கத்தில் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. 5 ஜி, வைஃபை 6, புளூடூத் v 5.2, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட இணைப்பு விருப்பங்களும் இதில் உள்ளன. தொலைபேசியில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வருகிறது. இது வார்ப் சார்ஜ் 65w பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 158.9x73.2x8.25 மிமீ அளவையும் 189 கிராம் எடையும் கொண்டது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 5G Goes on Sale in India via Amazon and OnePlus Site : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X