வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Nord 2 5G ஸ்மார்ட்போன் மீண்டும் இந்தியாவில் வெடித்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் வெடித்துச் சிதறிய ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி பற்றிய புதிய சம்பவம் டிவிட்டரில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயனருக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்திய சில படங்களுடன் இந்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது. இந்த OnePlus Nord 2 5G சாதனம் என்ன காரணத்தினால் வெடித்தது? இதற்கு நிறுவனம் என்ன பதில் அளித்தது என்று தெரிந்துகொள்ளலாம்.

வெடித்துச் சிதறிய OnePlus Nord 2 5G ஸ்மார்ட்போன்

வெடித்துச் சிதறிய OnePlus Nord 2 5G ஸ்மார்ட்போன்

OnePlus Nord 2 5G வெடித்துச் சிதறிய விவகாரம் தொடர்பாக இதுவரை OnePlus நிறுவனம் எந்த விவரங்களையும் அதன் தரப்பில் இருந்து வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள நிறுவனம் அணுகியதாகப் பாதிக்கப்பட்ட பயனர் தற்போது குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus Nord 2 5G வெடித்ததாகக் கூறப்படுவது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

 தொடைப் பகுதியில் பலத்த தீக்காயத்தை ஏற்படுத்திய ஸ்மார்ட்போன் வெடிப்பு

தொடைப் பகுதியில் பலத்த தீக்காயத்தை ஏற்படுத்திய ஸ்மார்ட்போன் வெடிப்பு

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயனர் ஒருவர் டிவிட்டரில் அவர் பயன்படுத்தி வந்த OnePlus Nord 2 5G ஸ்மார்ட்போன் யூனிட் தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் போதே வெடித்துச் சிதறியுள்ளது. இவர் பேண்டிற்குள் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் இவரின் தொடைப் பகுதியில் பலத்த தீக்காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமான தீக்காயத்தைக் காட்டும் படங்களையும் அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

டிவிட்டரில் வெளியான பதிவால் ஒன்பிளஸ் பாதிப்பு

டிவிட்டரில் வெளியான பதிவால் ஒன்பிளஸ் பாதிப்பு

OnePlus Nord 2 5G வெடித்துச் சிதறிய காரணமாகப் பயனருக்குப் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகப் புகைப்படங்களின் தகவல்கள் காட்டுகிறது. இந்தச் சிக்கல் முதலில் டிவிட்டரில் நவம்பர் 3 ஆம் தேதி, புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ஆரம்ப ட்வீட் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒன்பிளஸ் ஆதரவுக் குழு, சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க டிவிட்டரில் நேரடி செய்திகளை இணைக்குமாறு பயனரைக் கேட்டுக் கொண்டது.

இந்த விபத்து குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் என்ன சொல்கிறது?

இந்த விபத்து குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் என்ன சொல்கிறது?

இருப்பினும், நிறுவனம் இதுவரை எந்த விவரங்களையும் அதன் தரப்பில் இருந்து வழங்கவில்லை. எவ்வாறாயினும், இந்த விவகாரம் திங்கள்கிழமை பத்திரிகைகளில் வெளியானதைத் தொடர்ந்து மக்களின் கவனத்தைப் பெற்றது. பயனர் தனது அசல் ட்வீட் இல் இருந்து நிறுவனம் குறித்துப் பதிலளித்துள்ளார். OnePlus Nord 2 5G வெடித்துச் சிதறிய பின்னர் நிறுவனம் அவருடன் "நிலையான தொடர்பில்" இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

திடீர் வெடிப்பு தொடர்பான விசாரணை நடைபெறுகிறது

திடீர் வெடிப்பு தொடர்பான விசாரணை நடைபெறுகிறது

OnePlus நிறுவனத்திடம் இந்த விஷயம் பற்றி கருத்துக் கேட்டதற்கு நிறுவனம் எந்தவித பதிலையும் வெளியிடவில்லை. 91Mobiles அறிக்கையின் படி, ஒன்பிளஸ் இடமிருந்து "இது தொடர்பான விசாரணை விவரங்கள் சேகரிக்கும் செயல்பாட்டில்." நிறுவனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. OnePlus நார்ட் 2 5G நிறுவனத்தின் பிரபலமான இடைப்பட்ட மாதிரி மாடலான கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus நோர்ட் இன் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 மூன்று மாதங்களில் இரண்டு முறை வெடித்த ஸ்மார்ட்போன்

மூன்று மாதங்களில் இரண்டு முறை வெடித்த ஸ்மார்ட்போன்

அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று மாதங்களில், புதிய OnePlus ஃபோன் குறைந்தது இரண்டு முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதே போன்ற ஒரு வழக்கில், OnePlus தனது OnePlus Nord 2 5G ஃபோன் வெடித்ததாகக் குற்றம் சாட்டிய பயனருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பையும் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தொலைப்பேசியுடன், OnePlus Nord 2 5G சார்ஜரும் சமீபத்தில் வெடித்தது. இருப்பினும், நிறுவனம் இந்த விஷயத்தில் வெளிப்புற காரணிகளைக் குற்றம் சாட்டி தப்பித்துக்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?

OnePlus நார்ட் 2 பாக்-மேக் எடிஷன்

OnePlus நார்ட் 2 பாக்-மேக் எடிஷன்

சமீபத்திய OnePlus நார்ட் 2 ஸ்மார்ட்போனின் வெடிப்பு சம்பவம், OnePlus நார்ட் 2 பாக்-மேக் எடிஷன் அறிமுகம் செய்யப்படும் சில நாட்களுக்கு முன்னதாக வெடித்துள்ளது ஒன்பிளஸ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய போன் அமேசானில் தற்போது டீஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus Nord 2 Pac-Mac Edition ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 37,999 விலையில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான OnePlus Nord 2 இன் டாப்-ஆஃப்-லைன் மாறுபாட்டை விடவெறும் ரூ. 3,000 மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus Nord 2 விலையை விட இவ்வளவு தான் அதிகமா?

OnePlus Nord 2 விலையை விட இவ்வளவு தான் அதிகமா?

OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 34, 999 என்ற விலையில் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நொர்ட் 2 பாக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னர், இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச விபரங்கள் மற்றும் இன்னும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 5G Allegedly Explodes Causing Severe Burns To Its Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X