Home
News

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த OxygenOS 11 அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த அப்டேட் பயனர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவத்தை கொடுக்கும். மேலும் மேம்பட்ட டிஸ்பிளே அம்சம் மற்றும் மென்பொருள் வசதியில் சிறந்த மாற்றங்களை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

குறிப்பிட்ட அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம். இந்த அப்டேட் chat bubble, ஆப்களுக்கான one-time permissions மற்றும் கஸ்டமைஸ்
செய்யப்படக்கூடிய notification போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது, இதுவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் இருந்தால் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும்
மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Received Android 11 with One UI 3.0 Update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X