OnePlus New Year Sale:ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus New Year Sale என்ற தலைப்பில் தனது ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த சலுகை அமேசானில் வரும் ஜனவரி 4, 2020-வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7டி
அதன்படி 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ரூ.37,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7டி மாடல் ரூ.39,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.37,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும். அதன்பின்பு ஒன்பிளஸ் 7ப்ரோ மாடலுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7டி டிஸ்பிளே
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 7டி கேமரா
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications