Home
News

ரூ.42,000 கேட்குறாங்க.. OnePlus கஸ்டமர்கள் கதறல்.. Motherboard காலி.. என்னென்ன OnePlus மாடல்களில் பிரச்சனை?

OnePlus Motherboard Issue: கடந்த 2 - 3 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமான எல்லா வகையான (பிளாக்ஷிப் நம்பர் சீரீஸ் மற்றும் பட்ஜெட் விலை நோர்ட் சீரீஸ்) ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் மிகவும் சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஆகிய இரண்டு மாடல்களும் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ப்ரைஸ்-டூ-பெர்பார்மென்ஸ் ரேஷியோ (Price-to-performance ratio) ஆனது "ஆஹா ஓஹோ" என்று போற்றப்படுகிறது என்றே கூறலாம்.

இதற்கு அப்படியே நேர்மாறாக.. சில ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு எதிராக பகீர் கிளப்பும் புகார் ஒன்றும் எழுந்துள்ளது. குறிப்பிட்ட புகாரை முன்வைக்கும் ஒன்பிளஸ் கஸ்டமர்கள் "ரூ.42,000 செலவாகும்னு சொல்றாங்க.. மதர்போர்டுபோட்டி போயிடுச்சுன்னு சொல்றாங்க!" என்று எக்ஸ் தளத்தில் கதறுகின்றன என்றே கூறலாம். என்ன நடந்தது? இந்த புகாரில் எந்தெந்த ஒன்பிளஸ் மாடல்கள் சிக்கியுள்ளன? இதோ விவரங்கள்:

ரூ.42,000 கேட்குறாங்க.. OnePlus கஸ்டமர்கள் கதறல்.. Motherboard காலி!

முன்னதாக கிரீன் லைன் பிரச்சனையில் சிக்கிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது ஒரு புதிய ஹார்ட்வேர் செயலிழப்பு பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளன. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் யூசர் மதர்போர்டு செயலிழப்பு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக எக்ஸ் தளம் வழியாக புகாரளித்துள்ளார்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் ஒரு பயனரும் கூட இதே சிக்கலை சந்தித்துள்ளதாக புகார் அளித்துள்ளார். ஆக இந்த சிக்கல் ஒரு குறிப்பிட்ட மாடலில் மட்டுமே இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இதுகுறித்த புகாரில் ஒன்பிளஸ் 10 ப்ரோ யூசர் ஒருவர், "மதிய நேரத்தில் திடீரென்று ஸ்மார்ட்போன் ஆப் ஆனது. பிளாக் ஸ்க்ரீன் மட்டுமே தெரிந்தது; எந்த ரெஸ்பான்ஸும் இல்லை" என்று கூறியுள்ளார்.

இதற்காக சர்வீஸ் சென்டரை அணுகியபோது, ஸ்மார்ட்போனின் மதர்போர்டு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். மற்றொரு யூசர், சர்வீஸ் சென்டரில் மதர்போர்டை மாற்றியமைக்க ரூ.42,000-க்கு மேல் செலவு செய்ததோடு.. இந்த சிக்கல் சாப்டவேர் அப்டேட்டால் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார். இருப்பினும், சர்வீஸ் சென்டர் மேனேஜர் இதற்கான பழுதுபார்ப்பதில் 10 சதவீத தள்ளுபடியை மட்டுமே வழங்கி உள்ளார்.

இதற்கு முன்பாக போக்கோ (POCO) மற்றும் ரெட்மி (Redmi) ஆகிய நிறுவனங்களும் கூட மதர்போர்டு செயல் இழப்பில் சிக்கியுள்ளன. ஆனால் அவைகள் எல்லாமே சாப்டவேர் அப்டேட்டிற்கு பிறகான செயலிழப்புகளாக இருந்தன. சீன நிறுவனமான ஷாவ்மீயும் (Xiaomi) கூட இதில் சிக்கியுள்ளது. பயனர்களின் தொடர்ச்சியான புகார்களுக்கு பின்னர், நிகழ்ந்த சிக்கல்களை ஒப்புக்கொண்டு அதற்கு ஈடான வேலை செய்தது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது வரையிலாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

பொதுவாகவே ஒன்பிளஸ் நிறுவனம் இதுபோன்ற கியூசி சிக்கல்களை மிகவும் புத்திசாலித்தனமாக கையாளும்.முன்னதாக ஏற்பட்ட கிரீன் லைன் சிக்கலின் போது, எந்தவொரு பழைய ஒன்பிளஸ் மாடலுக்கும் வாழ்நாள் முழுவதுமான ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட் மற்றும் வவுச்சர்களை வழங்கியது. இந்த புதிய மதர்போர்டு சிக்கல் குறித்து இன்னும் அதிகமான பயனர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் செவி சாய்க்கலாம். இது ஒன்பிளஸ் பிராண்டிற்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனிலும் ஒரு சிக்கல் உண்டானது. அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் (UFS 4.0 Storage) வரும் என்று ஒன்பிளஸ் அறிவித்திருந்தது. இருப்பினும், ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து சந்தேகம் எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதாவது ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வேரியண்ட்களுமே உண்மையில் யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் வருகின்றன என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது. பின்னர் இந்த விஷயத்தை "யாருக்கும் பாதிப்பு இல்லாமல்" முன்னோக்கி எடுத்துச்செல்ல, ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவரும், சிஓஓ-வுமான கிண்டர் லியு (Kinder Liu), 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கியவர்களுக்கு ரீபண்ட் அறிவித்து இருந்தார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Motherboard Issue OnePlus 10 Pro Users claim New Hardware Failure What is Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X