இந்தியாவில் மக்கள் அதிகம் நம்பும் பிராண்ட் எது தெரியுமா? OnePlus, Samsung, Vivo, Oppo எது முதல் இடம்?

|

இந்தியாவில் OnePlus, Samsung, Vivo, Oppo என்று இன்னும் பல ஸ்மார்ட்போன் பிராண்ட்கள் அவர்களின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து, விற்பனை செய்து வருகின்றன. இப்படி, இந்தியாவில் பலதரப்பட்ட பிராண்ட்கள் இருக்கும் நிலையில், இதில் எந்த பிராண்ட் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக தயாரிப்புகளை விற்பனை செய்து தனக்கென்று ஒரு பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்தியாவில் அதிகம் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் எது?

இந்தியாவில் அதிகம் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் எது?

இந்தியாவில் அதிகம் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் எது என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதிலை கூறுவீர்கள்? நமக்குத் தெரிந்து பெரும்பாலானோர், சாம்சங் நிறுவனம் என்று கூறுவோம் அல்லது விவோ தான்ப்பா டாப் என்ற சிலர் கூறுவோம், அல்லது இன்னும் சிலர் இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லை சியோமி தான் கம்மி விலையில் அட்டகாசமான தயாரிப்புகளை வழங்குகிறது என்று அடித்து ஆணித்தரமாகக் கூட சிலர் கூறுவோம்.

OnePlus தான் முன்னணி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

OnePlus தான் முன்னணி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

ஆனால், இந்தியாவில் நீங்கள் நினைத்த எந்த பிராண்டும் முன்னிலையில் இல்லை என்பது தான் உண்மை. இந்தியாவில் அதிகமாகப் பிரபலமடைந்து, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த பிராண்ட் ஆக OnePlus இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? முன்னணி நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஒன்பிளஸ் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறதா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். எப்படிச் சந்தேகப்பட்டாலும், உண்மை இது தான்.

MSP ஸ்மார்ட்போன் நுகர்வோர் அறிக்கை வெளியிட்ட உண்மை

MSP ஸ்மார்ட்போன் நுகர்வோர் அறிக்கை வெளியிட்ட உண்மை

ஒன்பிளஸ் நிறுவனம் தான் இந்தியாவில் அதிக பிரபலமடைந்த நிறுவனமாக உருமாறியுள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட MSP ரிப்போர்ட் விபரங்கள் குறிப்பிடுகிறது. MSP ஸ்மார்ட்போன் நுகர்வோர் அறிக்கையின்படி, OnePlus நிறுவனம் 2022 இன் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக OnePlus நிறுவனம் மிட்ரேஞ்ச் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவுகளில் வெற்றியைக் கண்டுள்ளதாக அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

OnePlus 10R மற்றும் OnePlus 10 Pro தான் எல்லாவற்றிற்கும் காரணமா?

OnePlus 10R மற்றும் OnePlus 10 Pro தான் எல்லாவற்றிற்கும் காரணமா?

ஒன்பிளஸ் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியுள்ளது என்றும் அறிக்கை தெரிவிப்பதோடு, ஒன்பிளஸ் 10R (OnePlus 10R) மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களின் மூலம் OnePlus பிராண்ட் பெரும் ஆதிக்கத்தை இந்தியாவில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. OnePlus நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவில் சாம்சங் மற்றும் விவோ ஆகியவை நெருக்கமாகப் பட்டியலில் பின்தொடருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

எந்தெந்த பிராண்ட் எந்த இடத்தில் உள்ளது?

எந்தெந்த பிராண்ட் எந்த இடத்தில் உள்ளது?

முதல் ஐந்து பிராண்டுகள் பட்டியலில் Oppo மற்றும் Xiaomi போன்றவையும் இடம்பெற்றுள்ளன. Xiaomi இன் 12 ப்ரோ பிரீமியம் ஸ்மார்ட்போன் சிறப்பாகச் செயல்பட்டு, ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலை புள்ளியில் மிகவும் பிரபலமான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக வெற்றிகரமாக மாறியுள்ளது. ஒன்பிளஸ் குறிப்பாக மிட்ரேஞ்ச் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவுகளில் போட்டியை மிஞ்சியுள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் OnePlus தான் டாப்

இந்தியாவில் OnePlus தான் டாப்

பிரபல சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான OnePlus, 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் அட்டகாசமான செயல்திறனுடன் முதலிடத்திற்கு வந்துள்ளது. OnePlus 28.5 சதவீதத்துடன் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையிலான விலைப் புள்ளி தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக மாறியுள்ளது. இதே விலைப் புள்ளியின் பிரிவின் கீழ் சாம்சங் நிறுவனம் 28.1 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சாதனமாக மாறிய OnePlus 10R

இந்தியாவில் மிகவும் பிரபலமான சாதனமாக மாறிய OnePlus 10R

இந்த பிரிவில் ஒன்பிளஸுக்கு பின்னால் சாம்சங் நிறுவனம் மிக நெருக்கமாக இடம்பிடித்துள்ளது. OnePlus நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 10R சாதனம், இந்தியாவில் ரூ. 40,000 விலை பிரிவில் வருகிறது. இந்த சாதனம் ஒன்பிளஸ் பிராண்டிற்காக முன்னிலையில் முன்னேறி வந்துள்ளது. இந்த செக்மென்ட்டில் இந்தியாவில் மிகவும் பிரபலமான சாதனமாக இது மாறியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் திருப்தியையும் OnePlus 10R வலுவாகக் கொண்டுள்ளது.

வியப்பில் ஆழ்த்திய OnePlus

வியப்பில் ஆழ்த்திய OnePlus

MSP ஆல் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து பெறக்கூடிய மற்றொரு சுவாரஸ்யமான அனுமானம் என்னவென்றால், ஒவ்வொரு விலை வரம்பிலும் (ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை) ஒன்பிளஸ் சாதனம் பிரபலத்தின் அடிப்படையின் பிரிவில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக உள்ளது என்பது தான் வியப்பு. ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை பிரிவில் OnePlus 10R மற்றும் ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை பிரிவில் OnePlus 9RT மாடல் அதிக பிரபலத்தை உருவாக்கியுள்ளது.

OnePlus பின்னால் நெருக்கமாக பின்தொடரும் நிறுவனம் எது?

OnePlus பின்னால் நெருக்கமாக பின்தொடரும் நிறுவனம் எது?

ஒன்பிளஸ் 10 ப்ரோ ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வகையைக் கருத்தில் கொள்ளும்போது இரண்டாவது இடத்தில் வருகிறது. இத்துடன் ஒப்பிடுகையில் Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் குறைவாகப் பதிவாகியுள்ளது. இது ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வகைகளில் விலையுயர்ந்த மிகவும் பிரபலமான பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக மாறியுள்ளது. Xiaomi 12 Pro மற்றும் OnePlus 10 Pro இரண்டும் Samsung S22 Ultra , Vivo X80 Pro 5G மற்றும் Vivo X80 5G ஆகியவற்றை விட மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

ஒன்பிளஸ் இந்தியாவில் பிரபலமடைய இதுவும் காரணமா?

ஒன்பிளஸ் இந்தியாவில் பிரபலமடைய இதுவும் காரணமா?

ஒன்பிளஸ் பிராண்ட் பிரபலமடைந்ததற்கு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர் திருப்திக்கு வரும்போது சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று ரிப்போர்ட்டில் பதிவாகியுள்ளது. பிராண்ட் விசுவாசத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, அதிசயமாக ஆப்பிளுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் நிறுவனம் தான் பட்டியலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Most Popular Brand For Phones Under Rs 50000 In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X