ரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: ஒன்பிளஸ் நோர்ட் வாங்க ரெடியா?- அம்சங்கள், விலை குறித்த தகவல்!

|

மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்பிளஸ் ஒரு பிரதான நிறுவனமாகும். ஒன்பிளஸ் நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் இந்தியர்களின் மனதை கவர்ந்த நிறுவனமாகும். ஒன்பிளஸ் சாதனங்களில் நோர்ட் தொடர் மிகவும் பிரபலமானவை ஆகும். ஒன்பிளஸ் அதன் நோர்ட் தொடர் சாதனங்களை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை இந்த விலை வரம்பற்கு கீழ் நோர்ட் தொடர் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரூ.20,000-க்கு குறைவான விலையில் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை நிறுவனம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.20,000-க்கும் குறைவான விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ரூ.20,000-க்கும் குறைவான விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் இந்தியாவில் நோர்ட் தொடரில் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சாதனம் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அறிக்கைகள் சரியாக இருக்கும் பட்சத்தில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகக் குறைந்த விலை சாதனமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சாதனத்தின் பெயர் தற்போதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு காலம் மற்றும் வரவிருக்கும் பட்ஜெட் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் குறித்த குறிப்புகள் வெளியாகியுள்ளன.

புதிய பட்ஜெட் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய பட்ஜெட் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் இருக்கும் என 91மொபைல்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. புதிய குறிப்புகளை டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்டுள்ளார். அதேபோல் பட்ஜெட் போன் அறிமுகம் சற்று தாமதமாகலாம் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் நோர்ட் 2சிஇ ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி அல்லது மார்ச் மாததத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் முதன்மை மாடலான ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

புதிய நோர்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் வெளியீடு

புதிய நோர்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் வெளியீடு

இதையடுத்து புதிய நோர்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இது சாதனத்தின் தோராயமான வெளியீட்டுக் காலம் என கருதப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

மீடியாடெக் சிப் மூலம் இயங்கும்

மீடியாடெக் சிப் மூலம் இயங்கும்

வரவிருக்கும் புதிய பட்ஜெட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் சிப் மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயலியின் பிற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கூடுதலாக கசிந்த தகவலின்படி, 5ஜி இணைப்பு இதில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புதிய பட்ஜெட் நோர்ட் தொடர் சாதனத்தில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய அமோலெட் டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மிட் ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுகளில் ஸ்மார்ட்போன்

மிட் ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுகளில் ஸ்மார்ட்போன்

மிட் ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுகள் ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இந்திய சந்தையில் இருக்கிறது. பட்ஜெட் பிரிவு ஸ்மார்ட்போன்களில் ரியல்மி, ரெட்மி மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகள் தற்போது பிரபலமாக இருக்கிறது. தற்போது இந்த பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனமும் இணைய இருக்கிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ நாட்டில் மார்ச் மாத இறுதியில் அல்லது அதன் பிற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இயந்திர வடிவமைப்பு

புதிய இயந்திர வடிவமைப்பு

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயந்திரம் வடிவமைப்பின் அடிப்படையில் தற்போதைய மாடலைப் போலவே உள்ளது. இந்த ஒன்பிளஸ் மேக்னெட்டிக் ரொடேடிங் கேமரா சாதனத்தின் முன்பக்கத்தின் மேல் இடது மூலையில் துளையிடப்பட்ட வளைந்த திரையுடன் வருகிறது. ஆனால், இது வழக்கத்தைப் போன்ற கர்வுடு டிஸ்பிளே இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இது டூயல் கர்வுடு டிஸ்பிளே, அதாவது இரட்டை வளைந்த மேற்பரப்புக்குப் பதிலாக நான்கு மடங்கு வளைந்த மேற்பரப்புடன், இது கிட்டத்தட்ட வளைவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

உடலின் மேல் பகுதியில் மிகப் பெரிய கேமரா

உடலின் மேல் பகுதியில் மிகப் பெரிய கேமரா

இந்த புதிய இயந்திரத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் உள்ளது. உடலின் மேல் பகுதியில் மிகப் பெரிய கேமரா தொகுதி பொருத்தப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு கேமரா மட்டுமே ஒட்டுமொத்த ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது இன்றைய முதன்மை தொலைப்பேசி சந்தையில் முற்றிலும் காணப்படாத ஒன்றாக இருக்கிறது. காப்புரிமையின் படி, இந்த பெரிய கேமரா தானியங்கி சுழற்சியை ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Oneplus Might Launching New Nord Model Smartphone at under Rs.20,000: Expected Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X