Home
News

ஒன்பிளஸ் Nord பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.. OnePlus Ace பற்றி உங்களுக்கு தெரியுமா? வருகிறது புது மாடல்..

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மார்ட் போன் வரிசையில் புதிதாக ஒரு புதிய சீரிஸ் மாடலை அறிமுகம் செய்ய போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய சீரிஸ் மாடலின் பெயர் மற்றும் இதில் என்ன அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்ற சுவாரசிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் ஒரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகர் என்றால், கட்டாயம் இதை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

'Nord' தொடரைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுகமாகும் 'Ace' சீரிஸ் போன்கள்

'Nord' தொடரைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுகமாகும் 'Ace' சீரிஸ் போன்கள்

2020 ஆம் ஆண்டில், OnePlus அதன் மலிவு விலையில் 'Nord' தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போதைய ​​​​வதந்திகளின்படி, நிறுவனம் 'ஏஸ் (Ace)' என்றழைக்கப்படும் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் தொடரைத் திட்டமிடலாம். அதுமட்டுமல்ல, இதன் அறிமுகம் கூட இங்கிருந்து வெகு தொலைவில் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு பிரபலமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) படி, OnePlus மிக விரைவில் OnePlus Ace வரிசையை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus ஏஸ் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படும்)

OnePlus ஏஸ் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படும்)

இந்த புதிய ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட் போன் மாடல் ஒரு பட்ஜெட் சாதனமாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், பயனர்களுக்கு சக்திவாய்ந்த அனுபவத்தை வழங்கும். OnePlus Ace இன் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். OnePlus Ace ஆனது MediaTek Dimensity 8100 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த சிப் அல்ல என்றாலும் கூட, இது இன்னும் உயர்நிலை 5G ஸ்மார்ட்போன்களுக்கானது என்பது கவனிக்கத்தக்கது.

Oppo நிறுவனத்தின் Ace மாடல்கள் என்ன ஆச்சு?

Oppo நிறுவனத்தின் Ace மாடல்கள் என்ன ஆச்சு?

ஏஸ் வரிசையுடன், நிறுவனம் அதிவேக சார்ஜிங் மற்றும் கேமிங்கை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும். சற்று முன்னோக்கி சென்றால், ஒரு காலத்தில் Oppo நிறுவனம் கூட 'Ace' தொடர் ஸ்மார்ட்போன்களைக் கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. Oppo சில ஆண்டுகளுக்கு முன்பு Oppo Ace மற்றும் Oppo Ace 2 ஐ அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு அந்த மோனிகர் எதையும் அறிமுகப்படுத்தவில்லை. இதற்கான காரணம் எதுவும் அறிவிக்கப்படவுமில்லை.

புதிய OnePlus ஏஸ் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே மற்றும் கேமரா

புதிய OnePlus ஏஸ் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே மற்றும் கேமரா

இந்த புதிய OnePlus ஏஸ் ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். OnePlus Ace ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் 6.7' இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே பேனல்கள் BOE ஆல் வழங்கப்படுகின்றன என்று டிப்ஸ்டர் கூறினார். கேமரா பிரிவில், ஸ்மார்ட்போனில் சோனி IMX766 முதன்மை சென்சாருடன் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்.

150W வேகமான சார்ஜிங்கைக் கொண்டிருக்குமா?

150W வேகமான சார்ஜிங்கைக் கொண்டிருக்குமா?

OnePlus ஏஸ் ஸ்மார்ட் போனின் மற்ற இரண்டு சென்சார்கள் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2MP சென்சார். வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்களுக்கு, ஸ்மார்ட்போன் 16MP சென்சார் கொண்டிருக்கும். OnePlus Ace ஆனது 150W வேகமான சார்ஜிங்கைக் கொண்டிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். OnePlus 10 ஆனது MediaTek Dimensity 9000 SoC மற்றும் கிட்டத்தட்ட OnePlus Ace போன்ற விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் OnePlus Ace மற்றும் OnePlus 10 ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு வாடிக்கையாளருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Might be Planning to Introduce Ace Series Smartphones Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X