எப்போ., உண்மையாவா?- ஒன்பிளஸ் அறிமுகம் செய்யும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: விலை என்ன தெரியுமா?

|

சியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்களுடன் போட்டிப் போடும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.20,000-த்துக்கு கீழ் பட்ஜெட் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

விரைவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

விரைவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

இதுகுறித்து யோகேஷ் பிரார் டுவிட்டரில், ஒன்பிளஸ் விரைவில் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் விலை ரூ.20,000-த்துக்கும் குறைவாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத விலைப்பிரவு சாதனத்தை ஒன்பிளஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

நோர்ட் வரிசையில் வரும்

நோர்ட் வரிசையில் வரும்

இந்த ஸ்மார்ட்போனானது நோர்ட் வரிசையில் வரும் என எதிர்பார்க்க்பபடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த காலாண்டில் அல்லது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை இந்தியாவில் ப்ரீமியம் மற்றும் நடுத்தர விலை சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் போது அது இதுவே முதன்முறையாகும்.

அக்டோபரில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்ப்பு

அக்டோபரில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்ப்பு

ஒன்பிளஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஒனபிளஸ் 10 தொடரை கொண்டு வரும் போது இந்த ஸ்மார்ட்போனும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிறுவனம் ஒன்பிளஸ் 9 ஆர்டியை அக்டோபரில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் கடைசி ஒன்பிளஸ் சாதனம் இதுவாக இருக்கலாம்.

மெருகூட்டப்பட்ட பதிப்பாக இருக்கலாம்

மெருகூட்டப்பட்ட பதிப்பாக இருக்கலாம்

ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 10 சாதனத்தின் மெருகூட்டப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. கணிசமான மேம்படுத்தல் அம்சம் இதில் இருக்கலாம்.

புதிய பாகங்கள் வெளியாகலாம்

புதிய பாகங்கள் வெளியாகலாம்

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த வெளியீட்டு நிகழ்வில் புதிய பாகங்களை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வானது அக்டோபரில் நடைபெறும் என கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் ஏணைய அம்சங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலை சாதனம் வெளியாகும் எனவும் இது நோர்ட் பிரிவில் வெளியாகும் எனவும் ரூ.20,000 என்ற விலைப்பிரிவில் வரும் எனவும் கூறப்படுகிறது.

குறைந்த விலை ஸ்மார்ட்போன்

குறைந்த விலை ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கையில், அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்தது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்தது.

64 எம்பி பிரைமரி லென்ஸ்

64 எம்பி பிரைமரி லென்ஸ்

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus Might be Launch a Budget Smartphone at Rs.20,000 Range in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X