ஒன்பிளஸ் நிறுவனத்தின் பலே திட்டம்.! எலெக்ட்ரிக் சைக்கிள் உருவாக்கும் ஒன்பிளஸ்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டிவி, ஸ்மார்ட் வாட்ச் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக
இந்நிறுவனத்தின் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகிறது. இந்நிலையில் பிரபலமான ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்ததாக வாகன உற்பத்தியில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்பிளஸ் லைஃப்
மேலும் இதற்குவேண்டி ஒன்பிளஸ் லைஃப் என்ற பெயரில் புதிய பிராண்ட் ஒன்றை வர்த்தக முத்திரைக்கான பட்டியலில் காணப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் அல்லாத சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான டிரேட் மார்க் எனத் தெரிகிறது.

குறிப்பாக இதன் மூலம் செல்ஃப் பேலன்ஸிங் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் போர்ட்ஸ், ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்யப்படும் வாகனங்கள், ஓட்டுநர் இல்லாத கார் என பல வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதேபோல் இதற்கான வேலைகள் தற்போது
தொடங்கி உள்ளதாகவும், பின்பு இந்த வாகனங்கள் அறிமுகமாக எப்படியும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி
அதேபோல் அமேசான் தளத்தில் இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் கிடைக்கிறது. அதாவது ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மாரட்போனின் அசல் விலை ரூ.64,999-என்று கூறப்படுகிறது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.60,999-விலையில் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் கியூஎச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1,440x3,216 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ப்ராசஸர் வசதியுடன் அட்ரினோ 660ஜிபியு ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்திற்கு விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 65டி மற்றும் வார்ப் சார்ஜ் 50 வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
5 ஜிஇ 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ், என்எப்சி,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications