Just In
- 10 hrs ago
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- 11 hrs ago
இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!
- 12 hrs ago
அசல் விலையிலிருந்து பாதிக்கு-பாதி தள்ளுபடி.. புது போன் வாங்க இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காது பாஸ்..
- 13 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
பிளாஸ் டூ தேர்வில் மாறிய வினாத்தாள்.. பரிதவித்த மாணவர்கள்.. ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை
- Movies
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்.. பாராட்டித் தள்ளிய மோகன்லால்.. சூடுபிடித்த ‘விக்ரம்’ புரமோஷன்!
- Automobiles
போலீஸ் திடீர் அதிரடி... ஒரே வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை... ஏன் தெரியுமா?
- Finance
மொபைல் கேமிங் சந்தை இந்த ஆண்டு இத்தனை பில்லியனை தாண்டுமா?
- Sports
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிரதமர் பங்கேற்பு.. அகமதாபாத்தில் குவிந்த போலீசார்..அதுவும் எப்படி தெரியுமா
- Lifestyle
மட்டன் சுக்கா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிறுவனம் தற்போது சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இருக்கிறது. குவால்காம்-ன் சமீபத்திய சிப்செட் மூலம் இது இயக்கப்படும் எனவும் இது 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ வடிவமைப்பு
ஒன்பிளஸ் 10 ப்ரோ வடிவமைப்பு குறித்து பார்க்கையில், கேலக்ஸி எஸ்22 தொடர் மற்றும் சியோமி எம்ஐ11 அல்ட்ரா போன்றவையாக இருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ சாம்சங் சாதனத்தை போன்ற மெட்டல் கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்லைடர் மற்றும் அதன் முன்னோடிகளில் காணப்படும் மேட் பின்புற கண்ணாடி பேனலுடன் வருகிறது. இந்த சாதனத்தின் எடை 200.5 கிராம் ஆக இருக்கிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்கள்
ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.7 இன்ச் இரண்டாம் ஜென் எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது 3216 x 1440 பிக்சல்கள் தீர்மானத்தோடு க்யூஎச்டி+ ரெசல்யூஷன் உடன் வருகிறது. இதன் மேல் இடது மூலையில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஆதரவோடு வருகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம்
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வசதியோடும் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடும் வருகிறது. இந்த சாதனம் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயக்கப்படுகிறது. இதில் கேமிங் வசதிக்கென ஹைப்பர்பூஸ்ட் போன்ற சமீபத்திய அம்சங்களோடு வருகிறது.

மூன்று கேமரா அமைப்பு
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஓஐஎஸ் ஆதரவுடனான 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்789 முதன்மை கேமரா வசதியோடு வருகிறது. அதேபோல் இதில் 50 எம்பி இரண்டாம் நிலை ஐசோசெல் சென்சார், ஓஐஎஸ் உடனான 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா உடன் வருகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் உடனான 32 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ இணைப்பு விருப்பங்கள்
ஒன்பிளஸ் 10 ப்ரோ இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இது டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 80வாட்ஸ் சூப்பர் வூக் வேகமான வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ மூன்று வேரியண்ட் ஆதரவோடு வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.55,500 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்-ன் இந்திய மதிப்பு ரூ.58000 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.61500 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆல் திங்ஸ் க்ரீன் மற்றும் பிளாக் அவுட் வண்ண விருப்பத்தோடு வருகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999