Home
News

வெறித்தனமான ஒன்பிளஸ் கீபோர்ட் விற்பனைக்கு ரெடி! வெறித்தனமான விலை.. கூல் கலர்ஸ்.. இன்னும் என்ன இருக்கு?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் முதல் கீபோர்ட் சாதனத்தை கடந்த பிப்ரவரி 2023 இல் அறிமுகம் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இது இப்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கவுள்ளது. இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் முதல் கீபோர்ட் சாதனமான ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோ (OnePlus Keyboard 81 Pro) என்ற சாதனத்தை பிப்ரவரி மாதம் 2023-ல் உலகளவில் அறிமுகம் செய்தது. இத்துடன் நிறுவனம் ஒன்பிளஸ் டிவி Q2 ப்ரோ 65' இன்ச் (OnePlus TV Q2 Pro 65) மற்றும் ஒன்பிளஸ் ஹப் 5ஜி ரௌட்டர் (OnePlus Hub 5G router) மாடலை அறிமுகம் செய்தது.

வெறித்தனமான ஒன்பிளஸ் கீபோர்ட் விற்பனைக்கு ரெடி! வெறித்தனமான விலை..

அந்த நேரத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus TV Q2 Pro சாதனத்தின் விலையை மட்டும் அறிவித்தது. ஆனால், ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் ஹப் 5ஜி ரௌட்டர் சாதனத்தின் விலை பற்றிய தகவலை சீக்ரெட்டாக வைத்துக்கொண்டது. இந்த அறிமுகத்தின் போது தான் நிறுவனம் அதனுடைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனா ஒன்பிளஸ் 11 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, 4 மாத இடைவெளிக்கு பிறகு ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது அதனுடைய முதல் ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோ சாதனத்தின் விலை மற்றும் விற்பனை தேதி விபரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக இதன் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கலாம். இந்த சாதனத்தை கீக்கிறான் (Keychron) நிறுவனத்துடன் இணைந்து ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஒன்பிளஸ் இதில் ஸ்பிரிங்கி தெர்மோபிளாஸ்டிக் எலாஸ்டோமர் மார்பிள்-மல்லோ கீகேப்ஸ்களுடன் (springy thermoplastic elastomer marble-mallow keycaps) பொருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. ஒன்பிளஸின் டிசைன் டிரெண்டுடன் சீரமைக்க, ரிட்டர்ன் மற்றும் Esc கீ-களுக்கு நிறுவனம் போல்ட் ரெட் நிறத்தை பயன்படுத்தியுள்ளது. இது ஒன்பிளஸ் பிராண்டின் நிறத்தை பிரதிபலிக்கிறது.

வெறித்தனமான ஒன்பிளஸ் கீபோர்ட் விற்பனைக்கு ரெடி! வெறித்தனமான விலை..

வசதியை அதிகரிக்க கீகேப்ஸ்கள் சாஃப்ட் பவுண்ஸ் (Soft Bounce) வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் கீபோர்டின் அடிப்பகுதிக்கு நிறுவனம் அலுமினியத்தைப் பயன்படுத்தியுள்ளது. இந்த கீபோர்ட்டின் (கீபோர்ட்) அலைன்மென்டை மாற்றி அமைக்க இதில் லில்ட் கால்கள் (Lilt Legs) பொருத்தப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் சாதனத்தை கஸ்டமைஸ் செய்யக்கூடிய புதிய ரொடேடிங் நாப்பையும் (Rotating Knob) நிறுவனம் இத்துடன் வழங்கியுள்ளது.

இந்த ஒன்பிளஸ் கீபோர்ட் 81 பேரோ சாதனத்தில் USB Type-C போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. OnePlus இன் இந்த புதிய கீபோர்ட் டிவைஸ் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்த கிடைக்கிறது. இதில் உள்ள டாக்கில் கீஸ் (Toggle Keys) OnePlus ஸ்மார்ட்போன்களில் உள்ள அலெர்ட் ஸ்லைடரை (Alert Slider) போல் தோற்றமளிக்கிறது.

இந்த சாதனம் MacOS, Windows மற்றும் Linux உடன் இணக்கமானது. OnePlus சாதனத்தில் 4000mAh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த பிரைட்னஸ் உடன் இது 100 மணிநேரம் வரை நீடிக்கும் என்று OnePlus கூறுகிறது. இந்த சாதனம் 0 முதல் 100 வரை சார்ஜ் செய்ய சுமார் 5 மணிநேரம் எடுக்கும். OnePlus வயர்லெஸ் இணைப்பிற்காக புளூடூத் 5.1 (Bluetooth 5.1) பயன்படுத்துகிறது.

சாதனம் 10 மீட்டர் வயர்லெஸ் வரம்பைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் டார்க் கிரே (Dark Grey) மற்றும் லைட் கிரே (Light Grey) வண்ண விருப்பங்களில் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது ரூ.17,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது ஜூலை 18 முதல் 24ம் தேதிக்குள் முன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் ஓபன் சேல்ஸ் விற்பனை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துவங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Keyboard 81 Pro Price and Sale Details Announced In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X