இனி எல்லாம் பட்ஜெட் விலைதான்: பிப்.,17 அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஒய்1எஸ்- 32 இன்ச், 42 இன்ச் என இரண்டு அளவு!
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஒய்1எஸ் தொடர் ஸ்மார்ட் டிவிகளில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. பிராண்ட் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் நான்கு ஸ்மார்ட்டிவிகளை அறிமுகப்படுத்தும் என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு வரவிருக்கும் டிவிகளின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்களும் வெளியாகி இருக்கிறது.

ஒன்பிளஸ் ஒய்1எஸ் டிவி வெளியீட்டு தேதி
டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் மூலம் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்தியாவில் பிப்ரவரி 17 ஆம் தேதி நான்கு ஸ்மார்ட்டிவிகளை ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் என தெரிவித்துள்ளார். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலமாக இந்த ஒய்1எஸ் ஸ்மார்ட்டிவிகள் இரண்டு மாடல்கள் வாங்குவதற்கு கிடைக்கும். பிற இரண்டு மாடல்கள் ஆஃப்லைன் அடிப்படையிலான மாடல்களாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. ஆஃப்லைனில் வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவிகளின் பெயர் தற்போது வரை தெரியவில்லை.

ஒன்பிளஸ் ஒய்1எஸ் டிவி: எதிர்பார்க்கப்படும் அம்சம்
ஒன்பிளஸ் ஒய்1எஸ் டிவிகள் ஆனது 32 இன்ச் மற்றும் 42 இன்ச் என்ற இரண்டு டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கும் என புதிய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஒன்பிளஸ் டிவிகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. முகுல் ஷர்மா மற்றும் இஷான் அகர்வால் ஆகியோர் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஒய்1 எஸ் டிவி தொடர் ஆனது 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் டிவிகளின் அம்சங்கள்
ஒன்பிளஸ் டிவிகளின் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் டிவி எஸ் தொடர் ஆனது எச்டிஆர் 10+ டால்பி ஆடியோ ( அட்மாஸ் டிகோடிங்) உடனும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடனும் வரும் என கூறப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை ஸ்மார்ட் டிவிகளில் டூயல் பேண்ட் வைஃபை வசதி இருக்கும் எனவும் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மட்டுமே ஆதரிக்கப்படும் எனவும் இது முந்தைய மாடல்களை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் ஒய்1எஸ் தொடரின் அனைத்து மாடல்களும் ஆண்ட்ராய்டு டிவி 11.0 தனிப்பயனாக்க அம்சத்தோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஒய்1 எஸ் டிவி
வரவிருக்கும் ஒன்பிளஸ் ஒய்1 எஸ் டிவிகள் குறித்த தகவல்கள் இவ்வளவு மட்டுமே சேகரிக்க முடிந்தது. பிப்ரவரி 17 ஆம் தேதி ஸ்மார்ட்டிவிகளை அறிமுகப்படுத்த பிராண்டிற்கு திட்டம் இருக்கும் பட்சத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் இணையதளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் ஒய்1 எஸ் டிவிகள் ஆனது சந்தையில் கிடைக்கும் பிற பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகளுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2
ஒன்பிளஸ் நிறுவனமானது வரவிருக்கும் ஸ்மார்ட்டிவிகளை தவரி பிற பல சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் மற்றும் நோர்ட் 2டி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் சாதனத்தின் அம்சங்கள் சமீபத்தில் ஆன்லைனில் டிப் செய்யப்பட்டன. அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்தியாவில் தனிப்பட்ட சோதனையில் இருக்கிறது. இது மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக ஆக்சிஜன் ஓஸ் 12 மூலம் இயக்கப்படலாம் என வதந்தித் தகவல்கள் தெரிவிக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி பிப்ரவரி 11 அன்று நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ2 லைட் சாதனமானது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.20,000 என்ற விலைப்பிரிவில் அறிமுகம் செய்யும் என வதந்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications