ஜியோவுடன் இணையும் புதிய நிறுவனம், இந்தப் போன் நீங்க வச்சிருக்கீங்களா?

Written By:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஒன், ஒன்பிளஸ் 2 மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ் போன்ற கருவிகளுக்கு VoLTE வசதி வழங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

ஜியோவுடன் இணையும் புதிய நிறுவனம், இந்தப் போன் நீங்க வச்சிருக்கீங்களா?

ஒன்பிளஸ் ஃபோரம்ஸ் அதாவது வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் இணையம் வழியாக ஒன்பிளஸ் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்ததாக இணையத்தில் செய்திகள் வெளியாகின.

'ஒன்பிளஸ் வடிக்கையாளர்களுக்கு VoLTE வசதி வழங்கும் நோக்கில் தற்சமயம் ரிலையனஸ் ஜியோவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம். அனைத்துப் பணிகளும் நிறைவடையும் போது இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஜியோவுடன் இணையும் புதிய நிறுவனம், இந்தப் போன் நீங்க வச்சிருக்கீங்களா?

ஒன்பிளஸ் சார்பில் இந்தச் சேவை வழங்கப்பட இருக்கும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அந்நிறுவனம் ஒன்பிளஸ் ஒன், ஒன்பிளஸ் 2 மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ் போன்ற கருவிகளுக்கு VoLTE வசதி வழங்கப் பணியாற்றி வருவதாகவும், இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் மென்பொருள் அப்டேட் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

தற்சமயம் ரிலைன்ஸ் ஜியோ இந்தச் சேவையை அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தயாராகி வரும் நிலையில், ஒன்பிளஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு VoLTE சேவையை வழங்குவதை தமாதிக்காது என்றே கூறப்படுகின்றது. இது குறித்து ஒன்பிளஸ் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

English summary
OnePlus is said to be working with Reliance Jio for VoLTE support Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot