OnePlus Pay இந்தியாவில் விரைவில் அறிமுகமா? தனித்துவமான வசதிகள் இருக்க வாய்ப்பு

|

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் பே (OnePlus Pay) என்ற கட்டண தளத்தை இந்தியாவில் விரைவில் தொடங்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த புதிய பேமெண்ட் தளத்தைப் பற்றி பல கசிவுகள் மற்றும் வதந்திகள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது. சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனம் நாட்டில் தனது வர்த்தக முத்திரை பதித்துள்ளது. பிரபலமான டிப்ஸ்டர் முகுல் சர்மா சில தகவல்களைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய பேமெண்ட் சேவை பற்றி கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

இந்த புதிய ஒன்பிளஸ் பே தளம்

இந்த புதிய ஒன்பிளஸ் பே தளம்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய ஒன்பிளஸ் பே தளத்தை எப்போது தொடங்க உள்ளது என்ற தகவல் சரியாகத் தெரியவில்லை. நிறுவனத்திடமிருந்து அறிமுக தேதி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை, ஆனால், லீக் தகவல்கள் பல துணுக்குகளை நமக்குக் கொடுத்துள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, நிறுவனம் புதிய மாற்றுவதற்கான அம்சம் புதிய OxygenOS உடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் பே இந்தியாவில் வர்த்தக முத்திரை பெற்றதா?

ஒன்பிளஸ் பே இந்தியாவில் வர்த்தக முத்திரை பெற்றதா?

சமீபத்திய தகவலின் படி, ஒன்பிளஸ் பே சேவை இந்தியாவில் கூகிள் பே, ஃபோன்பே, பேடிஎம் மற்றும் பிற டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு எதிராகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த சேவை ஏற்கனவே சொந்த நாடான சீனாவில் வாலட் பயன்பாட்டின் மூலம் கிடைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒன்பிளஸ் இந்தியாவில் தனது தடத்தை ஸ்மார்ட்வாட்ச், ஃபிட்னஸ் பேண்ட், TWS மற்றும் பல சாதனங்களை அறிமுகம் செய்து விரிவுபடுத்தி வருகிறது. ஒன்பிளஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் டிவி தொலைக்காட்சி சந்தையிலும் நுழைந்துள்ளது.

உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

பல நம்பிக்கைகளுடன் ஒன்பிளஸ் பே சேவை

பல நம்பிக்கைகளுடன் ஒன்பிளஸ் பே சேவை

இந்த மாத இறுதியில் ஒன்பிளஸ் பே சேவையை நிறுவனம் இந்தியாவில் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒன்ப்ளஸ் வாட்ச் சாதனத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய வாட்சிக்கான அடுத்த அப்டேட் இல் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்பிளே அம்சத்தை நிறுவனம் சாப்ட்வேர் அப்டேட் மூலம் சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது. சரி, விஷயத்திற்கு வருவோம். ஒன்பிளஸ் பே சேவையை நிறுவனம் பல நம்பிக்கைகளுடன் துவங்கத் திட்டமிட்டிருந்தாலும் இந்தியாவில் இதன் முன்னேற்றம் சற்று சிரமமாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus பே மிகவும் தாமதமாக சந்தைக்குள் நுழைகிறது

OnePlus பே மிகவும் தாமதமாக சந்தைக்குள் நுழைகிறது

காரணம் OnePlus பே மிகவும் தாமதமாக பேமெண்ட் சந்தைக்குள் கால் பதிக்கிறது. இதற்கு முன்பே கூகிள் பே, PhonePe, போன்ற நிறுவனங்கள் தங்களின் தடத்தை இந்தியர்கள் மத்தியில் பதித்துவிட்டது. இருப்பினும் ஒன்பிளஸ் பே டிஜிட்டல் கட்டண தளங்களில் எப்படி போட்டியிடப் போகிறது என்பதைப் பார்க்கச் சுவாரசியமான இருக்கும் என்று தெரிகிறது. அதைப்போல், சமீபத்தில் இந்தியாவில் கால் பதித்த அமேசான் பே மற்றும் Mi பே போன்ற தளங்களால் நாட்டில் இன்னமும் ஒரு தனி இடத்தை பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

மக்களின் ஆர்வம் இந்தப்பக்கமே இருக்கிறது

மக்களின் ஆர்வம் இந்தப்பக்கமே இருக்கிறது

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவில் மட்டும் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், தனது பேமெண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய பல வருடங்கள் போராடி வந்தது என்பதையும் நாம் மறக்க முடியாது. வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டாலும் கூட இன்னும் மக்கள் Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பழைய ஆப்ஸ்களையே பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus is gearing up to launch its payment platform OnePlus Pay in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X